Chennai Metro Poonamallee Vadapalani:  பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை மூலமாக விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வெறும் 50 ரூபாய் செலவிலேயே எட்ட முடியும்.

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை:

ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்ட பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை பயணிகள் இடையே உடனடி ஹிட் ஆக மாறியுள்ளது. நகரின் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளை தவிர்த்து வசதியான மற்றும் விரைவான பயணத்தை மேற்கொள்ள, மக்கள் இந்த வழித்தடத்தை ஆர்வமுடன் தேர்வு செய்ய தொடங்கியுள்ளனர். ஆனால், வெறும் மூன்று பெட்டிகளை கொண்ட ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவது பயணிகளுக்கு போதுமானதாக இல்லை எனவும், கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்பதும் பிரதான கோரிக்கையாக எழுந்துள்ளது.

கூடுதல் பெட்டியை இணைக்க வேண்டும்..!

வழக்கமாக பூந்தமல்லியில் இருந்து வடபழனி வந்தடைய சுமார் ஒருமணி நேரம் வரை ஆகும். ஆனால், புதிய மெட்ரோ சேவையால் இந்த பயண நேரம் 25 முதல் 30 நிமிடங்களாக குறைந்துள்ளது. ஐயப்பன் தாங்கலில் இருந்து வடபழனிக்கான 45 நிமிட பயணம் தற்போது சுமார் 20 நிமிடங்களாக குறைந்துள்ளதாம். முதல் நாளான நேற்று உச்ச நேரத்தில் மட்டுமின்றி இயல்பான நேரத்தில் கூட ரயிலில் கூட்ட அலைமோதியது. நிற்க கூட இடமில்லாமல் பயணிகள் அவதியுற்றனர். எனவே இந்த வழித்தட தேவையை பூர்த்தி செய்ய நிச்சயமாக 3 பெட்டிகள் போதுமானதாக இருக்காது எனவும், குறைந்தபட்சம் ஒரு பெட்டியையாவது கூடுதலாக சேர்க்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தினர்.

இதையும் படியுங்கள்: Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி

இட நெருக்கடி, பெண்களுக்கு பிரத்யேக பெட்டி?

புதிய ரயில்கள் முதல் கட்ட ரயில்களை விடப் பெரியதாகத் தோன்றினாலும், அவற்றில் பொருட்களை வைப்பதற்கு என பிரத்யேக இடம் இல்லை. கூடுதலாக அவற்றில் பெண்களுக்கெனத் தனிப் பெட்டியும் இல்லை. அதற்குப் பதிலாக, போரூர் நிலையம் வரை பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட ஒரு பகுதி, பிங்க் ஸ்குவாட் பெண் காவலரால் கண்காணிக்கப்பட்டது. ஆனால், அந்த அந்த பெண் காவலர் இல்லாத நிலையில், அந்த பகுதியை ஆண்கள் ஆக்கிரமிப்பதையும் நேற்று காண முடிந்துள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரூ.50-க்கே ஏர்போர்ட், ரயில் நிலையம்

மெட்ரோவின் புதிய மஞ்சள் வழித்தடத்தால் நகரின் கடைக்கோடி இணைப்பு புள்ளிக்கான கட்டணமும் வெகுவாக குறைந்துள்ளது. விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் விம்கோ நகர் போன்ற பகுதிகளுக்கு, பைக் டாக்ஸி, ஆட்டோ மற்றும் வாடகை காரில் செல்ல குறைந்தபட்சம் 250 ரூபாயில் தொடங்கி ஆயிரம் ரூபாய் வரை நீளக்கூடும். உச்சபட்ச நேரத்தில் இந்த மேலும் உயரக்கூடும். ஆனாலும், போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் தலைவலியாக இருக்கும். பேருந்தில் டிக்கெட் கட்டணம் மலிவானதாக இருந்தாலும், இடநெருக்கடி, நீண்ட நேர பயணம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றால் எதிர்பார்த்த நேரத்திற்குள் குறிப்பிட்ட இடத்தை சென்றடைவது சிரமமாக இருக்கும். ஆனால், தற்போது பூந்தமல்லியில் இருந்து விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் விம்கோ நகர் போன்ற பகுதிகளுக்கு வெறும் 50 ரூபாய்க்கே, அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணம் மேற்கொள்ள முடியும்.

பூந்தமல்லி டூ வடபழனி - ரூ.50 கட்டணம்

பூந்தமல்லி டூ விம்கோ நகர் - ரூ.50 கட்டணம்

பூந்தமல்லி டூ சென்ட்ரல் - ரூ.50 கட்டணம்

பூந்தமல்லி டூ வடபழனி - ரூ.40 கட்டணம்

பூந்தமல்லி டூ ஆலந்தூர்- ரூ.40 கட்டணம்

பூந்தமல்லி டூ கோயம்பேடு - ரூ.40 கட்டணம்

குறைந்த டிக்கெட் விலை:

பூந்தமல்லியில் இருந்து விமான நிலையம் செல்ல விரும்புபவர்கள் வடபழனியில் இறங்கி, அங்கிருந்து இணைப்பு மெட்ரோ ரயிலில் ஏறி மீனம்பாக்கத்தை சென்றடையலாம். இந்த பயணத்திற்கு ஒரே டிக்கெட் போதுமானதாகும். இதே போன்று சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் விம்கோ நகர் பகுதிகளுக்கு செல்ல விரும்புபவர்களும் வடபழனியிலிருந்து இணைப்பு ரயிலில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம். குமனஞ்சாவடியில் இருந்து போரூர் பயணிக்க ஷேர் ஆட்டோவில் 30 ரூபாய் கொடுத்து 30 முதல் 45 நிமிடங்கள் வரை பயணிக்க வேண்டியிருந்த நிலையில், தற்போது அதே கட்டணத்தில் 10 நிமிடங்களில் அந்த பயணம் முடிவடைவதாக பயனர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article