மும்பை, அக்டோபர் 6, 2026: JioStar இன்று ‘Beyond Boundaries’ என்ற முன்னெடுப்பை அறிவித்துள்ளது. நேரடி கிரிக்கெட் ஒளிபரப்புகள் மற்றும் போட்டிக்கு முந்தைய, பிந்தைய நிகழ்ச்சிகள் (Pre and Post Programming - PPL) மூலம் வளர்ந்து வரும் பிராந்திய மொழி கிரிக்கெட் பார்வையாளர்களுடன் விளம்பரதாரர்களை நெருக்கமாக இணைப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.

பிராந்திய மொழிகளில் கிரிக்கெட் பார்ப்பது, ரசிகர்கள் விளையாட்டை அனுபவிக்கும் முறையில் முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் தளங்களில் பார்வையாளர்களின் ஈடுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. TATA IPL 2026 தொடரின்போது, JioHotstar தளத்தில் கன்னட ஒளிபரப்பின் பார்வையாளர் சென்றடைவு (Reach) கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் **30% அதிகரித்தது**. தெலுங்கு மற்றும் தமிழ் ஒளிபரப்புகளின் பார்வையாளர் சென்றடைவு முறையே **23% மற்றும் 12% அதிகரித்தது**. இந்த மூன்று சந்தைகளில், டிஜிட்டல் பார்வை நேரப் பங்கில் (Digital Watch-time Share) தெலுங்கு மொழி **30% வளர்ச்சியுடன்** முன்னிலை வகித்தது. இதனைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தமிழ் மொழி ஒளிபரப்புகளும் வளர்ச்சியைப் பதிவு செய்தன.

இந்த வளர்ச்சி, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளைக் கடந்து கிரிக்கெட் பார்வை அனுபவம் விரிவடைந்து வருவதைக் காட்டுகிறது. நேரடி விளையாட்டின் பிரம்மாண்டத்துடன், தங்களது மொழி மற்றும் கலாசாரத்துக்கு நெருக்கமான அனுபவத்தையும் ரசிகர்கள் அதிகளவில் விரும்புகின்றனர்.

ஒவ்வொரு பிராந்திய மொழி ஒளிபரப்பும் அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் அணிகளை மையமாகக் கொண்டு தனித்துவமான நிகழ்ச்சிகளையும் அடையாளத்தையும் உருவாக்கியுள்ளது. TATA IPL 2026 தொடரில், தெலுங்கு ஒளிபரப்பில் *Cricket with Chai* மற்றும் *Orange O Rangu*, கன்னட ஒளிபரப்பில் *Kempu Sainya* மற்றும் *Inside RCB* போன்ற பிரத்யேக நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தமிழ் ஒளிபரப்பில் *“இனி சிங்கப்பாதை”* என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட போட்டி நாள் நிகழ்ச்சிகளுடன், மூன்று மொழி ஒளிபரப்புகளிலும் வளர்ந்து வரும் இளம் திறமைகளை முன்னிலைப்படுத்தும் பகுதிகளும் இடம்பெற்றன.

12 மொழிகளில் 160-க்கும் மேற்பட்ட வர்ணனையாளர்களைக் கொண்ட குழு, பிராந்திய மொழி ஒளிபரப்புகளுக்கு வலுசேர்த்தது. முன்னாள் வீரர்கள் மற்றும் அந்தந்த பிராந்தியங்களைச் சேர்ந்த கிரிக்கெட் நிபுணர்கள் ஒவ்வொரு சந்தையிலும் வர்ணனையை வழிநடத்தினர். தமிழ் ஒளிபரப்பில் முரளி விஜய், எல். பாலாஜி, இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரஸ்ஸல் ஆர்னால்ட் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இடம்பெற்றனர். தெலுங்கு ஒளிபரப்பில் ஹனுமா விஹாரி மற்றும் எம்.எஸ்.கே. பிரசாத் ஆகியோரும், கன்னட ஒளிபரப்பில் வினய் குமார் மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இடம்பெற்றனர். ஒரே தேசிய அளவிலான வர்ணனைக் குழுவைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு பிராந்தியத்திலும் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான குரல்களையும் நிபுணத்துவத்தையும் முன்னிலைப்படுத்தும் JioStar-ன் அணுகுமுறையை இது எடுத்துக்காட்டுகிறது.

2026 சீசனில் டிஜிட்டல் தளங்களிலும் வலுவான வளர்ச்சி பதிவானது. **கனெக்டட் டிவி (Connected TV) பார்வையாளர் சென்றடைவு 22% அதிகரித்தது**. இது தொலைக்காட்சிக்கு இணையான பரந்த பார்வையாளர் சென்றடைவையும் டிஜிட்டல் தளங்களின் துல்லியமான இலக்கு பார்வையாளர் அணுகுமுறையையும் விளம்பரதாரர்கள் ஒருங்கிணைத்துப் பயன்படுத்துவதன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. டிஜிட்டல் வீடியோ பார்வைகள் **2500 கோடியை எட்டியதுடன்**, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் **8% அதிகரித்தன**. டிஜிட்டல் தளங்களில் பிராந்திய மொழிகளின் பார்வை நேரப் பங்கு **33% உயர்ந்தது**.

JioStar, Sports பிரிவின் விற்பனைத் தலைவர் அனுப் கோவிந்தன் கூறியதாவது:

“பிராந்திய மொழிகளில் கிரிக்கெட் பார்வை அதிகரித்து வருவது, இந்தியாவில் ரசிகர்கள் கிரிக்கெட்டை அனுபவிக்கும் விதம் மாறி வருவதைக் காட்டுகிறது. அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் போட்டிகளைப் பார்ப்பதுடன் மட்டுமல்லாமல், தங்களுக்குப் பரிச்சயமான மொழிகளிலும் சூழல்களிலும் விளையாட்டை அனுபவிக்க விரும்புகின்றனர். பிராண்டுகளைப் பொறுத்தவரை, இது பல்வேறு சந்தைகளில் கிரிக்கெட்டுடன் இன்னும் ஆழமாக இணைவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. ஒவ்வொரு பார்வையாளர் குழுவும் சந்தையும் எவ்வாறு தனித்துவம் பெறுகின்றன என்பதைப் புரிந்துகொண்டு, அவற்றின் நுணுக்கங்களுக்கு ஏற்ப செயல்படுவதே உண்மையான வாய்ப்பாகும். பிராந்திய மொழி பார்வையை வெறுமனே பார்வையாளர்களின் எண்ணிக்கை என்ற கண்ணோட்டத்தில் மட்டும் அணுகக்கூடாது.”

பல்வேறு தளங்களில் பிராந்திய மொழி ஒளிபரப்புகள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்து வருவதால், இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்கள் கிரிக்கெட்டுடன் இணைவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

JioStar-ஐப் பொறுத்தவரை, பல்வேறு மொழிகளில் அதிகரித்து வரும் பார்வையாளர் ஈடுபாடு, விளையாட்டைப் பார்க்கும் முறையில் ஏற்பட்டுள்ள பரந்த மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது. பிராந்திய மொழி ஒளிபரப்புகள், பிரதான ஒளிபரப்பின் ஒரு நீட்சியாக மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் சூழலின் முக்கிய அங்கமாகவும் வளர்ந்து வருகின்றன.

Source: Read Full Article