டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று பிற்பகல் இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் புகை சூழ்ந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்ட படி என்ன நடக்கப்போகிறதோ என்ற பதற்றத்தில் இருந்தனர்.

இண்டிகோ விமானத்தில் தீ

இதனையடுத்து விமானத்தை உடனடியாக விமானி தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் முண்டியடித்துக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறினர். இதன் பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் விமானத்தில் ஏற்பட்ட தீ ஒருவழியாக அணைக்கப்பட்டது.

இதையும் படிங்க: CM Vijay: சினிமாவில் கூட MGR புகழைப் பேசாத விஜய்.! வாக்குகாக இப்படியா? முன்னாள் எம்.பி. விளாசல்!

வீடியோ காட்சிகள் வைரல்

முதற்கட்ட விசாரணையில் பயணி வைத்திருந்த பவர்பேங் மூலம் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, இந்த தீ விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் மாற்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுதாக என இண்டிகோ விமான நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மின்னல் தாக்கியது

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் பாட்னாவில் இருந்து லக்னோ நோக்கி இண்டிகோ விமானம் நடுவானில் சுமார் 17,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தை மின்னல் தாக்கியது. பின்னர் லக்னோவில் உள்ள சௌத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தைப் பாதுகாப்பாக தரையிறக்கினர். இதில் விமானத்தின் மூக்குபகுதி தேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article