"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்

"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" -  மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
News Image

திருப்பத்தூர் அருகே பெண் பயணியை ஏற்றாமல் சென்ற வெற்றி பயண பேருந்து தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி இருக்கிறது. பேருந்தை நிறுத்தாமல் சென்ற நடத்துநர், ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட  மகளிர் இலவச பேருந்து சேவை, தவெக ஆட்சியில் வெற்றிப் பயணத் திட்டம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. சாதாரண பேருந்துகளில் மட்டும் பெண்களுக்கு இலவச பயணம் என்றிருந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய் விரிவாக்கி தொடங்கி வைத்தார். அதாவது, ஏசி பேருந்துகளை தவிர அனைத்து விதமான பேருந்துகளிலும் பெண்கள் பயணம் செய்யலாம்.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, சில நாட்களிலேயே பேருந்து நடத்துநர் மற்றும் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திட்டம் பற்றி சரியான புரிதல் இல்லாமல் இருந்ததால், இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டது. முதல்வர் விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தபோது, பேருந்துகளில் பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்திருந்தார்.

இந்த நிலையில், திருப்பத்தூர் அருகே பெண் ஒருவர் கை காட்டியும் அரசு பேருந்து நிற்காமல் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் பெண்கள் பயன்பெறும் வகையில் வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் பேருந்து  இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி பகுதியில் பெண் ஒருவர் பேருந்தை நிறுத்துவதற்காகக் கை காட்டியுள்ளார். ஆனால் பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மாடப்பள்ளி பகுதியில் பேருந்தை நிறுத்துவதற்காக கை காட்டியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக தெரிகிறது.

இதனால், அதிருப்தியடைந்த பெண் பேருந்து நிற்காமல் சென்றதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பெண்களின் பயண வசதிக்காக இயக்கப்படும் வெற்றி பயணப் பேருந்துகளில் பயணிகள் காத்திருக்கும் நிறுத்தங்களில் முறையாக நின்று பெண்களை ஏற்றி செல்ல வேண்டும். தொடர்ந்து பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks