IND vs WI: இரக்கமே இல்லாமல் அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. ஹோப் செஞ்சுரி..! 248 ரன்களை எட்டுமா இந்தியா?

IND vs WI: இரக்கமே இல்லாமல் அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. ஹோப் செஞ்சுரி..! 248 ரன்களை எட்டுமா இந்தியா?
News Image

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரு அணிகளும் மோதும் 4வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹைதரபாத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தொடக்கம் முதலே அதிரடி:

இதையடுத்து, ஷாய் ஹோப் - ஜுவல் ஆண்ட்ரூ பேட்டிங்கைத் தொடங்கினர். இந்த தொடர் முழுவதும் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்ந்து வந்த ஷாய் ஹோப் இந்த போட்டியிலும் அதிரடியாகவே ஆடினார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த ஜுவல் ஆண்ட்ரூ 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

ஹெட்மயர் விளாசல்:

அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஹெட்மயர் ஆட்டத்தில் இன்னும் அனல் ஏற்றினார் அவர் பவுண்டரிகளும், சிக்ஸரும் விளாச மறுமுனையில் ஷாய் ஹோப் சிக்ஸராக விளாசினார். மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், அக்ஷர் படேல் இந்த ஜோடியை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.

அபாரமாக ஆடிய ஹெட்மயர் ப்ரின்ஸ் யாதவ் பந்தில் அவுட்டானார். அவர் 12 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து வந்த பவெல் சற்று நிதானமாகத் தொடங்கினார். ஆனால், தொடக்கம் முதல் களத்தில் நங்கூரமிட்ட ஷாய் ஹோப் அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார். சற்று ஆட்டத்தில் வேகம் கூட்டத் தொடங்கிய நிலையில், பவெல் 17 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இரக்கமே இல்லாமல் அடித்த ரூதர்ஃபோர்ட்:

12.5 ஓவர்களில் 156 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் இழந்திருந்தபோது ஷாய் ஹோப்புடன் - ரூதர்ஃபோர்ட் ஜோடி சேர்ந்தார். இந்த கூட்டணி இந்திய பந்துவீச்சை இரக்கமே இல்லாமல் விளாசினர். ஷாய் ஹோப் சத்தமே இல்லாமல் பந்துகளை எல்லைக்கோட்டிற்கு அனுப்ப ரூதர்ஃபோர்ட் ருத்ரதாண்டவம் ஆடினார்.

மயங்க் யாதவ், அர்ஷ்தீப்சிங் பந்துவீச்சை விளாசித் தள்ளினர். இருவரும் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோரை மிக எளிதாக 200 ரன்களை கடக்க வைத்தனர். கடைசி கட்டத்தில் இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கிலும் கோட்டை விட்டதால் ரூதர்ஃபோர்ட் தனது விக்கெட்டையும் காப்பாற்றிக் கொண்டார்.

கடைசி 2 பந்துகளில் ஷாய் ஹோப் சதத்திற்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அவர் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசினார். இரண்டாவது பந்தையும் அவர் சிக்ஸருக்கு விளாசினார். இதனால், அவர் சதம் விளாசினார்.

ரூதர்ஃபோர்ட் சதம்:

ஷாய் ஹோப் கடைசி வரை அவுட்டாகாமல் 50 பந்துகளில் 4 பவுண்டரி 9 சிக்ஸருடன் 102 ரன்கள் எடுத்தார். ரூதர்ஃபோர்ட் 26 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணிக்கு 248 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணியில் ப்ரின்ஸ் யாதவ் மட்டுமே 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மயங்க் யாதவும், அர்ஷ்தீப்சிங்கும் 4 ஓவர்களில் 52 ரன்களை விட்டுக்கொடுத்தனர். அக்ஷர் படேல் 4 ஓவர்களில் 45 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks