IND vs WI: கொழுத்திய ஹோப்.. ரூட் எடுத்து செட்டிங் செய்த ரூதர்ஃபோர்ட்! 172 ரன்களை எட்டுமா இந்தியா?

IND vs WI: கொழுத்திய ஹோப்.. ரூட் எடுத்து செட்டிங் செய்த ரூதர்ஃபோர்ட்! 172 ரன்களை எட்டுமா இந்தியா?
News Image

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று லக்னோ மைதானத்தில் நடந்து வருகிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஹோப் - ரூதர்ஃபோர்ட்:

இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஷாய் ஹோப் - கமீல் பூரண் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். ஹோப் பவுண்டரிகளும், சிக்ஸரும் விளாச அவருக்கு ஒத்துழைப்பு அளித்த கமீல் பூரண் 11 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 12 ரன்கள் அடித்து அவுட்டானார்.

அடுத்து வந்த ஹெட்மயர் 5 ரன்னில் ரன் அவுட்டாக, அதே ஓவரில் ரோவ்மென் பவெல் டக் அவுட்டானார். 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற ஷாய் ஹோப் - ரூதர்ஃபோர்ட் ஜோடி சேர்ந்தது. இருவரும் இணைந்து அபாரமாக ஆடினர்.

இறுதிகட்ட அதிரடி:

ஷாய் ஹோப் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி அணி 100 ரன்களை கடக்க உதவினார். அவர் அபாரமாக ஆடி 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு அடுத்து வந்த சேஸ் 5 ரன்னிலும், அபாயகரமான பேட்ஸ்மேன் ஷெப்பர்ட் 7 ரன்னிலும் அவுட்டாக ரூதர்ஃபோர்ட் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கத் தொடங்கினார்.

172 ரன்கள் அவுட்:

அர்ஷ்தீப், மயங்க் ஆகியோரது பந்துவீச்சை அவர் விளாச வெஸ்ட் இண்டீஸ் ரன் மளமளவென எகிறியது. அபாரமாக ஆடிய அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியை 150 ரன்களை கடக்க வைத்தார். சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய அவர் வெஸ்ட் இண்டீஸ் அணி 171 ரன்களை எட்டியபோது அவுட்டானார்.

அவர் 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அவுட்டாக, அவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் அதாவது கடைசி ஓவரின் முதல் பந்திலே அகில் ஹொசைனும் 15 ரன்னில் அவுட்டாக வெஸ்ட் இண்டீஸ் அணி 171 ரன்களுக்கு 19.1 ஓவர்களில் ஆல் அவுட்டானது.

இந்திய அணிக்காக நமன் தீர் 4 ஓவர்களில் 31 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப், மயங்க் மற்றும் அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 40 ரன்களையும், அர்ஷ்தீப்சிங் 4 ஓவர்களில் 34 ரன்களையும் வாரி வழங்கினர்.

இந்திய அணி 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கி ஆடி வருகிறது. சேசிங்கின்போது பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் இந்திய அணிக்கு அது பக்கபலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.  வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷமர் ஜோசப், அகில் ஹொசைன், ஸ்ப்ரிங்கர், ஃபோர்ட், ஷெப்பர்ட், சேஸ் ஆகியோரே பந்துவீச்சில் பிரதானமாக உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்க இந்தியா முனைப்புடன் உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks