IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?

IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?
News Image

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதி வரும் டி20 தொடர் தற்போது நடந்து வருகிறது.

4வது டி20:

இரு அணிகளும் மோதிய முதல் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 4வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டி அந்த நாட்டில் உள்ள ஆக்லாந்து மைதானத்தில் நடக்கிறது.

சொந்த நாட்டிலே முதல் 3 போட்டியில் இந்தியாவிடம் தோற்ற நிலையில், நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது. கடந்த 3 போட்டியிலும் இரு அணிகளும் பலவீனமாக பந்துவீசிய நிலையில், இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீச வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்:

கடந்த 3 போட்டிகள் நடைபெற்ற மைதானமும் பேட்டிங்கிற்கு பெரியளவில் ஒத்துழைத்த நிலையில், இந்த மைதானத்திலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்திய அணியைப் பொறுத்தமட்டில் அபிஷேக் சர்மா, சாம்சன், சூர்யவன்ஷி வலுவாக உள்ளனர். மிடில் ஆர்டரில் திலக் வர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், நமன் தீர் உள்ளனர். சமீபகாலமாக ஃபினிஷர் ரோலில் நமன் தீர் சிறப்பாக ஆடி வருகிறார்.

நியூசிலாந்து அணியிலும் டிம் செஃபெர்ட், ஆலன், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ஜேக்கப்ஸ், ப்ரேஸ்வேல், சான்ட்னர் என வலுவான பேட்டிங் ஆர்டர் உள்ளனர். இவர்களில் மிட்செல் ஃபார்முக்கு வந்தால் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

வெற்றியைத் தீர்மானிக்கும் பந்துவீச்சு:

வெற்றியைத் தீர்மானிக்கும் வீரர்களாக பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இந்திய அணியில் புவனேஷ், அர்ஷ்தீப்சிங், ப்ரின்ஸ் யாதவ், அக்ஷர் படேல், நிதிஷ் ரெட்டி சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும். நியூசிலாந்து அணியைப் பொறுத்தமட்டில் ஜேக்கப் டஃபி, ஜேமிசன், மிலினே, ஃபிஷர், சான்ட்னர், ப்ரேஸ்வல் என சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அவர்கள் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர்.

இதனால் இரு அணி வீரர்களும் கட்டுப்பாடுடன் பந்துவீச வேண்டியது அவசியமாகும். இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்ற ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks