IND vs NZ: சீட்டுக்கட்டு போல் சரிந்த இந்திய பேட்டிங்.. 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி!

IND vs NZ: சீட்டுக்கட்டு போல் சரிந்த இந்திய பேட்டிங்.. 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி!
News Image

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையாயான 4வது டி20 போட்டி ஆக்லாந்து மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. பைவ் சூர்யவன்ஷிக்குப் பதிலாக இஷான் கிஷனும், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக மயங்க் யாதவ் களமிறங்கினர். நியூசிலாந்தில் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட்டவில்லை.

சிக்சர், பவுண்டரியாக பறக்க விட்ட நியூசிலாந்து

அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். டிம் செபர்ட் 3, அதிரடி ஆடிய டேரில் மிட்செல் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் பின் ஆலன் 17 பந்தில் 31 ரன்னும், பெவன்  ஜேக்கப்ஸ் 7 ரன்களில் வெளியேறினர். தடுமாறிக்கொண்ட நியூசிலாந்து அணியில் 5வது விக்கெட்டுக்கு கிளென் பிலிப்ஸ்-ப்ரேஸ்வெல் ஜோடி இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 40 பந்தில் 115 ரன்கள் குவித்தது. ப்ரேஸ்வேல் 25 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கிளென் பிலிப்ஸ் அதிரடி

கிளென் பிலிப்ஸ் 46 பந்தில் அதிரடி சதம் அடித்தார்.அவர் 107 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 10 சிக்சர், 4 பவுண்டரி அடங்கும். இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 259 ரன்கள் குவித்துள்ளது.  இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய மாயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பிரின்ஸ் யாதவ், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

சீட்டு கட்டுபோல் சரிந்த விக்கெட்

இதையடுத்து, 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 4 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. சஞ்சு சாம்சன் (4) மற்றும் இஷான் கிஷன் (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக திலக் வர்மா(35),  நமன் தீர்(28), அபிஷேக் சர்மா (27),  ஸ்ரேயாஸ் ஐயர் (22), நிதிஷ் குமார் ரெட்டி (21) ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜேக்கப் டஃபி 4 , மிட்செல் சான்ட்னர், மேத்யூ ஃபிஷர் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது நியூசிலாந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்ததை அடுத்து 3-1 என்ற முன்னிலையில் இந்தியா உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks