Holidays: வரட்டா மாமே டுர்.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்! காலியாகும் பெருநகரங்கள்!

Holidays: வரட்டா மாமே டுர்.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்! காலியாகும் பெருநகரங்கள்!
News Image

தமிழ்நாட்டில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆயுதபூஜை, விஜயதசமி. நவராத்திர விழாவிற்காக வாரம் முழுக்க கொலு பண்டிகை வைத்து கொண்டாடிய பிறகு கடைசி இரு நாட்களை மிகவும் விமர்சையாக கொண்டாடுவது தமிழர்கள் வழக்கம்.

தொடர் விடுமுறை:

நடப்பாண்டிற்கான சரஸ்வதி பூஜை, விஜயதசமி வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால், சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் வசிக்கும் இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் நேற்று இரவு முதல் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

ஊருக்கு படையெடுக்கும் மக்கள்:

தொடர் விடுமுறை வருவதால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக  அரசு சார்பில் ஏற்கனவே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 15 ஆயிரம் பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது.

கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம், மறைமலைநகர் உள்பட 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேருந்து நிலையங்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மட்டும் 10 முன்பதிவு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு:

மேலும், பயணிகளின் பாதுகாப்பு கருதி பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் உள்பட பயணிகளின் பாதுகாப்பு கருதி கூட்டம் அதிகமாக உள்ளிட்ட இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் இடங்களில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறையினர் செய்துள்ளனர்.

தொடர் விடுமுறையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வழக்கம்போல தனியார் பேருந்துகள் தொடர் விடுமுறை மற்றும் பயணிகள் கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பன்மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.

அலைமோதும் கூட்டம்:

ரயில்களிலும் டிக்கெட் விற்பனை முழு அளவில் நடைபெற்றுள்ள நிலையில், நேற்று இரவு முதல் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பொதுமக்கள் பேருந்துகள் இல்லாமல் சிரமப்படுவதை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் பயணிகள் பிரதான பேருந்து நிலையங்களுக்குச் செல்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

பேருந்துகள், ரயில்கள் மட்டுமின்றி சொந்த வாகனங்கள் மூலமாகவும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். சாலைகளில் வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகளவு காணப்படும் என்பதால் விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks