தாய், குழந்தைக்கு HIV தொற்று பரவிய விவகாரம்.. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் வழங்க உத்தரவு!

தாய், குழந்தைக்கு HIV தொற்று பரவிய விவகாரம்..  பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் வழங்க உத்தரவு!
News Image

திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பிரசவத்துக்காக திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 22ம் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த பெண்ணுக்கு ரத்தம் தேவைப்பட்டதை அடுத்து மருத்துவமனை ரத்த வங்கியில் பெறப்பட்டு அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. பின்னர் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து பெண்ணுக்கும், அவரது குழந்தைக்கும் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட தனக்கும், தனது குழந்தைக்கும் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பாதிக்கப்பட்ட பெண் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

எச்ஐவி தொற்று

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரத்த தானம் செய்தவரிடமிருந்து ரத்தம் பெறப்பட்டபோது பரிசோதனை செய்யப்பட்டதில் எச்ஐவி தொற்று இல்லை என்றே சான்றிதழ் வந்தது. இருப்பினும் தானம் செய்தவர் வைரஸ் பரவிய ஆரம்ப நிலையான விண்டோ பீரியட்' காலத்தில் இருக்கும் தொற்றுகளைக் கண்டறியும் அறிவியல் முறைகளோ அல்லது அமைப்போ இல்லை.

இடைக்கால நிவாரணம்

அந்த சமயத்தில் வழக்கமான சோதனைகளில் வைரஸை கண்டறியது கடினம். வேண்டுமென்றே இந்த தவறு நடைபெறவில்லை என மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் குழந்தையின் எதிர்காரத்தை கருத்தில் கொண்டு அவசர கால செலவுகளுக்காக ரூ.2.50 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாய்க்கும் குழந்தைக்கும் ரூ.40 லட்சம்

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாய்க்கும், அவரது குழந்தைக்கும் சேர்த்து மொத்தமாக ரூபாய் 40 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி  ஏற்கனவே வழங்கிய ரூ.2.50 லட்சம் போக மீதமுள்ள ரூபாய் 37.50 லட்சத்தில் 17.50 லட்சத்தை இரண்டு வாரத்திலும், ரூபாய் 20 லட்சத்தை நான்கு வாரத்திலும் வழங்கவும் உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks