Heavy Rain: எந்தெந்த மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்? தமிழ்நாடு வெதர்மேன் குளு குளு அப்டேட்

Heavy Rain: எந்தெந்த மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்? தமிழ்நாடு வெதர்மேன் குளு குளு அப்டேட்
News Image

தமிழகத்தில் கடும் வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இன்று முதல் விலகி தமிழகத்தில் அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை

மேலும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

ஹாட் ஸ்பாட்

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் இன்று சிறப்பான நாட்களில் ஒன்றாக இருக்கப் போகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், கரூர், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, விருதுநகர், தருமபுரி, வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை போன்ற மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஹாட் ஸ்பாட் என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks