சென்னையில் கடந்த சில மாதங்களாகவே ஆபரணத் தங்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை சரசரவென குறைந்து வந்த நிலையில் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. எவ்வளவு தான் நகை விலை ஏறினாலும் நகை கடைகளில் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில் இன்றை தங்கம் விலை ஏறியதா? இறங்கியதா? என்பதை பார்ப்போம்.

நேற்றைய விலை

நேற்று வாரத்தின் முதல் நாளே திங்கள் கிழமை உயர்வுடன் தொடங்கியது. தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,085க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680ஆக விற்பனை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதையும் படிங்க: கோயம்பேடு மார்க்கெட்டில் கிடுகிடுவென உயர்ந்த வெங்காயம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் இன்றைய (அக்டோபர் 27) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,135ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.14,329ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ.114,632ஆக விற்பனையாகிறது. நகை விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தீபாவளி நெருக்கும் நிலையில் மீண்டும் தங்கம் உயரத்தொடங்கியுள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது. ஒரு கிராம் விலை ரூ.220க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.220,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article