தங்கம் ஆண், பெண் உள்ளிட்ட அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை தொடர்ந்து வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் தங்கம் வாங்கும் எண்ணம் கனவாக போய்விடுமோ என்று புலம்பி வருகின்றனர். இந்நிலையில் தங்கம் விலை உயர்வுக்கு சர்வதேச பொருளாதார மற்றும் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் போக்கு தங்கம் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. குறிப்பாக அக்டோபர் மாதம் தொடங்கியதில் தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இன்று மட்டும் இரண்டு முறை தங்கம் சரிந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: Chennai Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க.. சென்னையில் நாளை 9 மணி முதல் மின்தடை!

நேற்றைய விலை

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வந்தது. அதாவது ஒரு கிராம் ரூ.13,880க்கும், ஒரு சவரன் ரூ.1,09,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்

இந்நிலையில் இன்றைய (அக்டோபர் 12) நிலவரப்படி காலை நேரத்தில் சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மாலை நேரத்தில் ரூ.960 சரிந்துள்ளது. மொத்தமாக ரூ.1280 குறைந்துள்ளது.அதாவது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1280 குறைந்து ரூ.1,09,760ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.13,720ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.14,967ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.119,736ஆக விற்பனையாகிறது.

வெள்ளி நிலவரம்

வெள்ளி விலை கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இன்றி ஒரே விலையில் நீடிக்கிறது. ஒரு கிராம் விலை ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.245,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article