நாம் முன்னோர்கள் சொன்னது போல மண்ணிலும், பொன்னிலும் முதலீடு செய்தால் என்றும் வீணாகாது என்பார்கள். அதற்கு ஏற்றார் போல பிளாட்டின் விலையும், தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக சவரன் ரூ.60,0000 விற்கப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் கிடுகிடுவென உயர்ந்து ரூ.1,00,000 தாண்டியுள்ளது. அப்படி இருந்த போதிலும் நகைக்கடைகளில் கூட்டம் குறையவில்லை. திருமணம் உள்ளிட்ட விஷச நிகழ்ச்சிகளுக்காக எவ்வளவு விலை விற்றாலும் வேறு வழியில்லாமல் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் சர்வதேச பொருளாதாரம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் அமெரிக்கா ஈரான் இடையே போர் பதற்றம் உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் சரசரவென குறைந்து வந்த தங்கம் அம்மாதம் இறுதியில் மீண்டும் உயரத்தொடங்கியது. இந்நிலையில் இன்றை தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்ப்போம்.

நேற்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வந்தது. ஒரு தங்கம் கிராம் ரூ.13,195க்கும், சவரன் ரூ.1,05,560க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் இன்றைய (அக்டோபர் 30) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,04,320ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,040ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.14,225ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ.1,13,800ஆக விற்பனையாகிறது. தீபாவளி நெருக்கும் நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்ததை அடுத்து நகைக்கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வந்த நிலையில் இன்று கிராமிற்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் விலை ரூ.215க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,15,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article