தீபாவளி நெருக்கும் நிலையில் தங்கம் விலை தாறுமாறாக உயரும் எதிர்பார்க்கப்பட்ட நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது அக்டோபர் மாதம் தொடக்கத்தில் தொடர்ந்து சரிவை சந்தித்த வந்த தங்கம் திடீரென கடந்த சில நாட்களாக உயர்ந்தது. இதனால் தீபாவளி நெருங்குவதால் தங்கம் விலை உயரும் கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.1,240 குறைந்ததை அடுத்து நகைக்கடைகளில் கூட்டம் குவிந்தது. இந்நிலையில் இன்றும் எதிர்பாராத வகையில் சரசரவென தங்கம் விலை சரிவை கண்டுள்ளது.

அதாவது நேற்று தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.155 குறைந்து ரூ.13,040க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,04,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதையும் படிங்க: Gold Rate Today: தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. போட்டி போட்டுக்கு நகைக்கடைகளில் குவியும் பொதுமக்கள்!

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் இன்றைய (அக்டோபர் 31) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.310 குறைந்து ரூ. 12,730ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 13,887ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ. 111,096ஆக விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.3,720 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் சரிவை சந்தித்து வருதால் காலை முதலே நகைக்கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கடந்த சில நாட்களாக சரசரவென குறைந்துள்ளது. இன்று கிராமிற்கு ரூ.10 குறைந்துள்ளது. ஒரு கிராம் விலை ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article