EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!

EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
News Image

தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் கட்சி அதிமுக. திமுக-விற்கு மிகப்பெரிய சவாலாக அரை நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில் திகழ்ந்து வந்த அதிமுக-வில் நிலை இன்று மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது.

மீண்டும் இபிஎஸ் மீது அதிருப்தி:

தவெக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்ததால் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மீது பலரும் அதிருப்தியில் உள்ளனர். சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு பிறகு மீண்டும் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி எடுத்த நிலையில், இடைத்தேர்தலில் தன்னை நிரூபிக்க இபிஎஸ்-க்கு வாய்ப்பு கிடைத்தது.

இரண்டில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால்கூட அதிமுக-வில் தனது செல்வாக்கை எடப்பாடி பழனிசாமி நிலைநிறுத்தலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், இரண்டு தொகுதியிலும் அதிமுக தோல்வி அடைந்தது மட்டுமின்றி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 3 மாதங்களுக்கு முன்பு அதிமுக கைவசம் இருந்த தொகுதி தற்போது 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டிருப்பதால் அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதிருப்தியாளர்கள் புது வியூகம்:

ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி அடைந்து அவருக்கு எதிராக கட்சியில் சில சீனியர்கள் காய் நகர்த்தி வருகின்றனர். இந்த இடைத்தேர்தல் தோல்வியை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதன் எதிரொலியாக எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி எம்எல்ஏ-க்கள், இபிஎஸ்- ஆதரவு எம்எல்ஏ-க்களிடம் எஸ்பி வேலுமணி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சருக்கு சொந்தமாக சென்னையில் உள்ள வீட்டில் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

விரைவில் வெடிக்கும் பூகம்பம்?

இதில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆலோசனை நடத்தியதுடன் இபிஎஸ் செயற்குழுவை கூட்டி அவருக்கு சாதகமாக முடிவு எடுக்கும் முன்பு தாங்கள் முந்திக் கொள்ள வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனால், விரைவில் அதிமுக-வில் மீண்டும் பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று கருதப்படுகிறது.

தவெக-விற்கு தாவிய சத்தியபாமா, மரகதம் குமரவேல் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக எம்எல்ஏ-க்கள் சிலர் தாங்களும் தவெக-விற்கு தாவலாமா? என்று தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தாவும் அதிருப்தியாளர்கள்:

தமிழக அரசியலில் அதிமுக-வை முதலமைச்சர் விஜய் தொடர்ந்து மற்றும் பலர் என்று விமர்சித்து வருகிறார். அதிமுக-வின் எம்எல்ஏ-க்கள் மட்டுமின்றி அதிமுக -வின் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முதல் கீழ்மட்ட நிர்வாகிகள் வரை பலரும் தவெக-விற்கு தாவி வருகின்றனர.

அதிமுக-வைப் பொறுத்தமட்டில் அந்த கட்சியில் இளைஞர்கள் எண்ணிக்கை என்பதும் பெரியளவில் சரிந்துள்ளது. இளைஞர்கள் வாக்கை உணர்ந்த திமுக அதை சரி செய்யும் பணியில் கட்சியில் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. ஆனால், அதிமுக தற்போது வரை அதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ளவில்லை.

மேலும், தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காய் நகர்த்தும் அதிருப்தியாளர்கள் கீழ்மட்ட அளவில் அதிருப்தியில் உள்ளவர்களையும் சரி செய்ய முடிவு எடுத்து வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks