EPS vs VIJAY : 3 மணி நேரம் என் வீட்டில் காத்திருந்த விஜய்.! நடந்தது என்ன? பிளாஷ்பேக்கைச் சொல்லி அதிரவைத்த இபிஎஸ்!

EPS vs VIJAY : 3 மணி நேரம் என் வீட்டில் காத்திருந்த விஜய்.! நடந்தது என்ன? பிளாஷ்பேக்கைச் சொல்லி அதிரவைத்த இபிஎஸ்!
News Image

இடைத்தேர்தல்- இறுதிக்கட்ட பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிராச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் கே.பானுமதியை ஆதரித்து, தளவாய்பட்டினத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இது இயற்கையாக வந்த தேர்தல் இல்லை, இது திணிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் இறந்தால் இடைத்தேர்தல் வரும், அப்படியா இந்த தேர்தல் வந்தது? ஏற்கனவே 2026 ஏப்ரலில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு, உங்களால் வெற்றி பெற்று, 12 நாளில் குதிரை பேரத்தில் விலைபோனவர், இப்போது தவெக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார். அதிமுக எம்.எல்.ஏவாக பதவியேற்றதும் என்னை வந்து சந்தித்தார். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு இரண்டே நாட்களில் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுக்கிறார். பரிசீலிப்பதாக சபாநாயகர் சொல்கிறார்.

விஜய் படத்தில் நடித்ததை விட பிரமாண்டமாக நடிக்கிறார்

அடுத்த ஐந்தாவது நிமிடம் முதல் மாடியில் தவெகவில் சேர்கிறார். நீதி கேட்கத்தான் உங்களை சந்திக்கிறேன். இது தர்மமா? நியாயமா? இத்தேர்தலில் நம் வேட்பாளரை எதிர்த்து அவர் நிறுத்தப்பட்டிருக்கிறார், அவரை டெபாசிட் இழக்கச் செய்வீர்களா? அவருக்குத் தக்க தண்டனை கிடைக்கும் அளவுக்கு நல்ல தீர்ப்பை வழங்குவீர்களா? ஒரு எம்.எல்.ஏவை எதற்கு தேர்வு செய்கிறீர்கள்? மக்களின் பிரச்னைகளை சட்டமன்றத்தில் பேசுவதற்குத்தான். இரண்டு தினங்களுக்கு முன்பு முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக பிரசாரத்தில் அந்தம்மா அழுகிறது. அதாவது, நீலிக்கண்ணீர் வடிக்கிறது. விஜய் படத்தில் நடித்ததை விட பிரமாண்டமாக நடித்துள்ளார். என்னை விமர்சிக்கிறார். நான் சீட் கொடுத்ததால் தான் நின்றார். நான் தான் ஏ ஃபார்ம் பி ஃபார்ம் கொடுத்து, தொண்டர்கள் உழைப்பால் வென்றார், சொந்த செல்வாக்கிலா வென்றீர்கள்? பொட்டி பொட்டியா வாங்கிவிட்டு அங்கு போய் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

ஆடு, மாடு திருடுவதுபோல எம்.எல்.ஏ.வை திருடிவிட்டார்கள்

விஜய் அந்த அம்மாவை நேரில் பார்த்ததே இல்லை. அந்தம்மா அழுகுகிறாராம், அவர் தேற்றுகிறாராம், சினிமாவை மிஞ்சிவிட்டது. ஜனநாயகன் படத்துக்குப் பதிலாக இதை எடுத்திருந்தால் நன்றாக ஓடியிருக்கும். யாரை ஏமாற்றும் நாடகம் இது? தோல்வி பயம் வந்துவிட்டது, இங்கு மட்டுமல்ல, மதுராந்தகத்திலும் தோல்வி பயம் வந்துவிட்டது. ஒரு கட்சியில் வென்ற எம்.எல்.ஏ.வை வைத்துக்கொண்டு கட்சியில் சேர்த்து வெட்கமில்லாமல் அவரை அறிமுகம் செய்கிறார் என்றால், அவர் உண்மையான தலைவரா? ஆடு, மாடு திருடுவதுபோல எம்.எல்.ஏ.வை திருடிவிட்டார்கள். திருடிவிட்டு அவரையே வேட்பாளராக அறிமுகம் செய்கிறார் என்றால் அவருக்கு தக்க தண்டனை கொடுப்பீர்களா? எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு கட்சியில் வென்ற எம்.எல்.ஏவை ராஜினாமா செய்யச்சொல்லி, அவங்க கட்சியில் வேட்பாளராக நிறுத்துவார்கள்...? அப்படியென்றால், மக்களை என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? நான்   சொல்லக்கூடாது நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.

சட்டமன்றத்தில் நடந்தது என்ன.?

ஒரு தொகுதியில் 320 பூத் இருக்கிறது. அத்தனையிலும் அவருக்காக உழைத்து 16 ஆயிரம் வாக்குகளில் வெற்றி பெற வைத்தால், ஓட்டுப்போட்ட மக்களையும், உழைத்தவர்களையும் மதிக்கவில்லை. இப்படிப்பட்டவருக்கு சரியான தண்டனை கொடுப்பீர்களா? நீங்கள் கொடுக்கும் தீர்ப்பினால், இனி எவருக்கும் இந்த எண்ணமே வரவே கூடாது. காவல்துறை எவ்வளவு முக்கியமான துறை? நானும் தான் காவல்துறையைக் கையில் வைத்திருந்தேன். திமுக கேட்ட கேள்விக்கு டான் டான் என்று பதில் சொன்னேன். திமுக பேசிக்கொண்டிருக்கும் போது முதல்வர் திடீரென எழுந்தார், நான்கூட இப்போதாவது தைரியம் வந்ததே என்று நினைத்தேன், ஆனால் எழுந்து திங்களன்று பதில் சொல்கிறேன், யாரும் ஓடிப்போய் விடக்கூடாது என்று சொல்லி அவர் ஓடிவிட்டார். சரி, திங்களன்று சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு பதில் அளிப்பார் என்று நான் 50 நிமிடங்கள் பேசினேன். பதில் சொல்ல வந்தார், அப்போதாவது பதில் சொல்வார் என்று பார்த்தால், யாருக்கும் பதிலில்லை, மேலோட்டமாக பேசிவிட்டு சர்க்காரியா கமிஷனுக்குப் போய்விட்டார்.

எந்த கேள்வி கேட்டாலும் ஆடாது அசையாது விஜய் அமர்ந்திருக்கிறார்

இந்த ஆட்சியில் 5 மாதத்தில் 255 கொலை, 300 பாலியல் சீண்டல், போதை பொருள் விற்பனை, கட்டப்பஞ்சாயத்துகள். இது பற்றியெல்லாம் பதில் இல்லை. சர்க்காரியா கமிஷன் வந்தபோது முதல்வரும் பிறக்கவில்லை, எதிர்க்கட்சித் தலைவரும் பிறக்கவில்லை, இதைப் பேசி என்ன பிரயோஜனம்? முதல்வர் வெட்டிப்பேச்சு பேசி, இல்லாத பிரச்னையை கொண்டுவந்து பிரச்னையாகி, அதோடு எல்லாம் முடிந்துவிட்டது. இவரை என்ன செய்வது? இவர்தான் இப்படி என்றால், எந்த கேள்வி கேட்டாலும் 3 அமைச்சர்கள் தான் பதில் சொல்கிறார்கள். எந்த கேள்வி கேட்டாலும் ஆடாது அசையாது விஜய் அமர்ந்திருக்கிறார்.

எம்.எல்.ஏ பதவியேற்பு நிகழ்வில் ஐந்தரை மணி நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தார், அது ஒரு சாதனை தான். மவுன சாமியார் மாதிரி இருக்கும் முதல்வர், தமிழ்நாட்டு முதல்வர் தான். பிரசாரத்தில் பட்டியலிட்டு பேசினார், இதனை கொண்டுவருவேன் என்று பேசினார், நாங்கள் திட்டத்தை கொடுத்துவிட்டு பேசுகிறோம்.

ஊரான்வீட்டு நெய்யில் ஸ்வீட்

ஊரான்வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யாதீங்கனு சொன்னார், இப்ப அவர் செஞ்சுகிட்டு இருக்கிறார், யார் வீட்டு நெய்யில் செய்கிறார்? நகராட்சி வீட்டுவரி 100% உயர்ந்துவிட்டது, ஆண்டுக்கு 6% உயர்வு என்று இரண்டு வருடத்தில் 12% ஏற்றிவிட்டனர். கடைக்கு வரி 150% உயர்ந்துவிட்டது, கடைக்கும் ஆண்டுக்கு 6% உயர்வு. வரி குறைக்கிறேன் என்றனர், குறைக்கவில்லை. மின்கட்டணம் கடுமையான உயர்ந்துவிட்டது. வீடுகளுக்கு முதலில் 52% உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5% என மூன்றாண்டுகளில் 15% உயர்த்தி, இப்போது 67% ஆக உள்ளது. கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள். மின்கட்டணம் எப்படி கணக்கிடுகிறார்கள் என்றே தெரியவில்லை, அமைச்சரிடம் கேட்டால் அடுத்த மாதம் சரிசெய்து கொள்ளலாம் என்கிறார்.

இதுவரை 40 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டனர், அடுத்து ஒன்றரை லட்சம் கோடி வாங்கப்போகிறார்கள். இதனை நாம் தான் கட்டவேண்டும். முந்தைய அரசு வாங்கிய கடன் 10 லட்சம் கோடி, வட்டி 78 ஆயிரம் கோடி, இந்த நேரத்தில் புதிய தலைமை செயலகம் தேவையா? சொகுசான அறை வேண்டுமாம், எல்லா முதல்வரும் இருந்த அறை பத்தாதாம், அதனால் எல்லாமே காஸ்ட்லியா வேண்டும், 10 கோடியில் அறை நாமக்கல் மாளிகையில் அமைக்கிறார், இவரா மக்களுக்கு நன்மை செய்வார்? ஆட்சிக்கு வந்த ஐந்து மாதத்திலேயே இவ்வளவு அட்டூழியம் நடக்கிறது. யாராவது இதுக்கு முன்பு இப்படி செயல்பட்டார்களா?

3 மணி நேரம் காத்துக்கிடந்தார் விஜய்

அதிமுகவை மற்றும் பலர் என்கிறார். அந்த மற்றும் பலரான எனது வீட்டில் தான் 3 மணி நேரம் வந்து காத்துக்கிடந்தார் விஜய். ஒரு பிரச்னையைச் சொன்னார், படம் ரிலீஸ் ஆக வேண்டும், அன்றைய தினம் ஞாயிறு விடுமுறை, அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லை. எல்லா டிக்கெட்டையும் விற்றுவிட்டோம். நீங்கள் போங்கள், செஞ்சு கொடுக்கிறேன் என்றேன். இல்லை நீங்கள் செய்து கொடுத்தால்தான் நான் போவேன் என்றார். அவர் கேட்டதை செய்துகொடுத்தேன், அந்த நன்றி அவருக்கு இருக்கிறதா..? அதை அவர் சொல்லாததே நல்லதுதான். எனவே நம் கட்சிக்கு துரோகம் செய்த துரோகிக்கு தகுந்த பாடத்தை இத்தேர்தலில் வழங்குங்கள் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks