E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?

E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
News Image

MTC E-bus Tender: சென்னை பெருநகர் பயன்பாட்டிற்காக ஆயிரத்திற்கும் அதிகமான மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அவகாசம் 11 முறை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து:

சென்னை பெருநகரின் தொடக்கத்தில் இருந்து இறுதிப்புள்ளி வரை இணைக்கும் வகையில், ஆயிரம் தாழ்தள  குளிர்சாதன வசதி மின்சார பேருந்துகள் மற்றும் 220 சிறிய, குறும் பேருந்துகளை கொள்முதல் செய்ய வெளியிடப்பட்ட டெண்டரை எம்டிசி நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, 220 சிறிய மற்றும் மைக்ரோ ஏசி பேருந்துகளுக்கான டெண்டரில் யாரும் ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட டெண்டர் திறப்பு:

கடந்த திமுக ஆட்சியில் 2026ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பேருந்து கொள்முதலுக்கான இந்த இரண்டு டெண்டர்களும் வெளியிடப்பட்டன. விதிமுறைகளின் படி, ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இருந்தால் மட்டுமே ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்படும். ஆனால் ஸ்விட்ச் நிறுவனத்தை தவிர வேறு யாருமே இந்த டெண்டரில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த ஒப்பந்தப்புள்ளி திறப்பு என்பது 11 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வரை வழங்கப்பட்டு இருந்த கடைசி அவகாசத்திலும், புதிய போட்டியாளர்கள் யாரும் இணையாததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரர்கள் முன்வராததன் காரணம் என்ன?

மொத்த செலவு ஒப்பந்த (GCC) மாதிரியின் கீழ் இந்த டெண்டர் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 7ம் தேதி திறக்க வேண்டிய டெண்டர் 11 முறை தேதி நீட்டிக்கப்பட்டு 189 நாட்கள் தள்ளிப்போய் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.  GCC ஒப்பந்தப்படி பேருந்து, டிரைவர், பராமரிப்பு, சார்ஜிங் ஸ்டேஷன், மின்சாரம் எல்லாமே ஒப்பந்ததாரர் தான் பார்க்க வேண்டும். MTC கிலோ மீட்டர் அடிப்படையில் வாடகை மட்டும் கொடுக்கும். தற்போது ஓடும் 600-க்கும் அதிகமான மின்சார பேருந்துகளில் ஏசி அல்லாத பேருந்துக்கு கிலோ மீட்டருக்கு 77 ரூபாயும், ஏசி பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 81 ரூபாயும் MTC நிர்வாகம் வழங்கி வருகிறது. ஆனால் பேட்டரி விலை, மின் கட்டண உயர்வு, சென்னை வெயிலுக்கு AC பேருந்து மெயின்டனன்ஸ் அதிகம் என்பதால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.95 முதல் ரூ.110 வரை கேட்பதாக கூறப்படுகிறது. இந்த இழுபறியால் தான் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கூடுதல் பேருந்து சேவைக்காக சென்னை மக்கள் மேலும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி

சென்னை பெருநகர் இணைப்பை மேம்படுத்த இலக்கு

நகரிலுள்ள மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் முதன்மைப் பகுதிக்குள், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றால் அடையாளம் காணப்பட்ட வழித்தடங்களில், நடத்துநர் இல்லாத சேவைகளாகவும், பேருந்திலேயே கட்டணம் வசூலிக்கும் முறைகளுடனும் மினி பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டன. ஏழு மீட்டர் பேருந்துகளில் குறைந்தபட்சம் 13 இருக்கைகள், ஒரு சக்கர நாற்காலிக்கான இடம் மற்றும் ஒரு ஓட்டுநர் இருக்க வேண்டும் என்றும், ஐந்து மீட்டர் பேருந்துகளில் 11 இருக்கைகள், ஒரு சக்கர நாற்காலிக்கான இடம் மற்றும் ஒரு ஓட்டுநர் இருக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் இருந்தது. ஒவ்வொரு பேருந்தும் மாதத்திற்கு 4,200 கி.மீ. தூரம் இயக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அனைத்து 220 பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வந்தவுடன், இந்த பேருந்துக் குழுமம் மாதத்திற்கு 9.24 லட்சம் பேருந்து-கி.மீ. தூரத்தை எட்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks