DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு

DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
News Image

DMK MLA Rajendran: சட்டவிரோதமாகநிலம்  பதிவு செய்தது தொடர்பாக, கடையநல்லூர் திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 6 பேர் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 420-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி நிலத்தை பறித்த திமுக MLA?

மாற்றுத்திறனாளி ஒருவரின் புகாரின் அடிப்படையில், 9.7 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாகப் பதிவு செய்தது தொடர்பாக, கடையநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.எம். ராஜேந்திரன், அவரது சகோதரர், சார்-பதிவாளர், கிராம நிர்வாக அலுவலர், மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் நில அளவையர் ஆகியோர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 420-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு தன்னை மதிமுகவில் இருந்து விலக்கி முழுமையாக திமுகவில் இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

9.7 ஏக்கர் நிலம் அபகரிப்பு?

கோயம்புத்தூர்மாவட்டம், வால்பாறை வட்டம், அக்காமலை அஞ்சல் பகுதியை சேர்ந்த முருகையா என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில், தனக்கு தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் வடக்குப்பனவடலி கிராமத்தில் பூர்வீகமாக பாத்தியப்பட்ட இடம் திருமலாபுரத்தில் உள்ளது. மொத்தம் 9.7 ஏக்கர் நிலமானது எனது தகப்பனார் பெயரிலும். சித்தப்பா பெயரிலும், கூட்டு பட்டாவில் இருந்தது. இந்நிலையில் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.எம்.ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர் செல்லத்துரை ஆகியோருக்கு, மேலநீலிதநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் எனது சகோதரர் சேகர் என்பவர் எனது தகப்பனாரின் இறப்புச்சான்றிதழ் மற்றும் வாரிசுசான்றிதழ் இல்லாமலும் மேற்படி வாரிசுதாரர்களான, எங்களின் அனுமதி இன்றியும் எந்தவிதமான ஆவணங்களோ கையெழுத்தோ போட்டு வழங்காத நிலையில் பத்திரப்பதிவு செய்து சட்டவிரோதமான மோசடியான முறையில் விற்றுவிட்டார்.

இதையும் படியுங்கள்: TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை

மாற்றுத்திறனாளி புகார் என்ன?

2019ம் ஆண்டு ஆவணங்களின்படி, ராஜேந்திரன் மகன் சித்தார்த்தன் என்பவர் பெயரில் நிலம் பதிவு செய்தது போன்றும், சட்டபடி எங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்தினை திட்டமிட்டு சட்டவிரோதமாக மேற்படி பத்திரபதிவினை மேற்கொண்டுள்ளனர். எதிர்மனுதாரர்கள் உரிய முறையில் இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று பெறாமல் வாரிசுகள் இல்லாமல் மேற்படி பதிவினை மேற்கொண்டுள்ளனர். எனது தகப்பனாரின் வாரிசுகளான நாங்கள் கையெழுத்து செய்யாத போது மேற்படி பத்திரபதிவு சட்டப்டி செல்லாது. மேற்படி ஆவணங்கள் போலியான ஆவணங்களாகும். மேலநீலிதநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கேட்டபொது தவறு நடந்துவிட்டது. இந்த பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை. நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ள நிலையில் உரிய நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடிக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.

மாற்றுத்திறனாளி கோரிக்கை

எங்களுக்கு சொந்தமான இடத்தில் மனைப்பிரிவுகளாக அமைத்து மோசடியான முறையில் விற்பனை செய்து வருகிறார்கள். ராஜேந்திரன் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பு காட்டியதில் எங்களுக்கு சொந்தமான சொத்தின் விபரத்தினையும் சேர்த்து காட்டியுள்ளார். அவற்றை ஆராய்ந்து அரசு நிர்ணயம் செய்த இழப்பீடு எனக்கு தொகையை பெற்றுத்தருமாறும் இது தொடர்பாக சம்மபந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் எனக்கான நிவாரணத்தை பெற்று தருமாறு நீதிமன்றத்தை கோருகிறேன்” என புகார்தாரரான முருகையா தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks