Diwali 2026: படுஜோராக நடக்கும் பட்டாசு, புத்தாடை விற்பனை! குவியும் ஆர்டர்களும், மக்களும்! குதூகலத்தில் வியாபாரிகள்

Diwali 2026: படுஜோராக நடக்கும் பட்டாசு, புத்தாடை விற்பனை! குவியும் ஆர்டர்களும், மக்களும்! குதூகலத்தில் வியாபாரிகள்
News Image

தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிககைளில் ஒன்று தீபாவளி. தீபாவளி என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது பட்டாசு. பட்டாசு இல்லாத தீபாவளி ஒரு தீபாவளியே இல்லை எனும் அளவிற்கு பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை கொண்டாடுவார்கள்.

படுஜோராக நடக்கும் பட்டாசு விற்பனை:

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக தமிழ்நாடு அரசு பட்டாசு வெடிக்கவும், சில விதிகளைப் பின்பற்றி பட்டாசுகளைத் தயாரிக்கவும் கடந்த சில ஆண்டுகளாகவே உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தாண்டும் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு தயாரிப்பு படுஜோராக நடந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே பட்டாசுகளை மொத்த விற்பனை செய்யும் கடைக்காரர்கள் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பாளர்களிடம் முன்பதிவு செய்த நிலையில், அவர்களுக்கு பட்டாசுகளை அனுப்பும் பணிகளில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குவியும் பட்டாசு ஆர்டர்:

மொத்த விற்பனை மட்டுமின்றி சில்லறை விற்பனையாகவும் பட்டாசு விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பட்டாசுகளை ஆர்டர் செய்து வருகின்றனர்.

மழையின் தாக்கம் இருப்பதால் பட்டாசுகள் தயாரிப்பிலும், பட்டாசுகளை கொண்டு சேர்ப்பதிலும் எந்தவித தடையும் இல்லாத வகையில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்து வருகின்றனர். பட்டாசு தயாரிப்பு மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆலைகளில் பணியாளர்கள் மிகவும் தீவிரமாக தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகிழ்ச்சி:

பசுமை பட்டாசுகளைத் தயாரிக்கவே அரசு உத்தரவிட்டிருப்பதால் அதற்கேற்ப பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா? என்றும் தொழிற்சாலைகளில் அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.  பட்டாசு விற்பனை படுஜோராக நடப்பதால் பட்டாசு ஆலை உரிமையாளர்களும், தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புத்தாடைகள் விற்பனை படுஜோர்:

பட்டாசுகள் மட்டுமின்றி புத்தாடைகள் விற்பனையும் மறுபக்கம் படுஜோராக நடந்து வருகிறது. ஏனென்றால், பட்டாசுகள் மட்டுமின்றி புத்தாடைகளும் அணிந்து தீபாவளி பண்டிகையை காெண்டாடுவது தமிழ்நாட்டில் பழக்கமாக உள்ளது.

தீபாவளி பண்டிகை காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீபாவளி விற்பனை துணிக்கடைகளில் தீவிரமாக நடந்து வருகிறது. துணிக்கடைகளில் விலை குறைந்த ஆடைகள் முதல் விலையுயர்ந்த ஆடைகள் வரை அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப புத்தாடைகள் விற்பனை மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.

அலைமோதும் மக்கள் கூட்டம்:

தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற பெருநகரங்களில் துணிக்கடைகளில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

புத்தாடைகள், பட்டாசுகள் மட்டுமின்றி  இனிப்புகள் தயாரிப்பிற்கான ஆர்டர்களும் இனிப்பு வியாபாரிகளுக்கு குவிந்து வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks