Deepti Sharma: புதிய வரலாறு படைத்த தீப்தி ஷர்மா! ஜிம்பாப்வேயை சிதைத்த இந்திய சிங்கப்பெண்கள் அணி!

Deepti Sharma: புதிய வரலாறு படைத்த தீப்தி ஷர்மா! ஜிம்பாப்வேயை சிதைத்த இந்திய சிங்கப்பெண்கள் அணி!
News Image

மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய கிரிக்கெட் அணி தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறது. இந்திய அணியின் தற்போதைய தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டர் வீராங்கனையாக திகழ்பவர் தீப்தி சர்மா.

தீப்தி ஷர்மா புதிய வரலாறு:

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி நேற்று வதோராவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக ப்ரதிகா ராவல் 61 ரன்களும், முன்னாள் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 126 ரன்களும் விளாசினர். இவர்களுடன் தீப்தி ஷர்மா ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் எடுத்தார்.

தீப்தி சர்மா இந்த சதம் மூலமாக புதிய வரலாறு படைத்துள்ளார். அவர் 86 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 106 ரன்கள் எடுத்தார். இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வரலாற்றிலே 6வது அல்லது அதற்கு கீழே பேட்டிங் ஆர்டரில் இறங்கி சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற வரலாற்றை நேற்று தீப்தி சர்மா படைத்தார்.

இதற்கு முன்பு அந்த ஆர்டரில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற வரலாற்றை ரிச்சா கோஷ் 94 ரன்களுடன் தன்வசம் வைத்திருந்தார். அவர் கடந்தாண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக விசாகப்பட்டினத்தில் இந்த சாதனையை படைத்திருந்தார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பந்துவீச்சிலும் அசத்தல்:

பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்திய தீப்தி ஷர்மா 10 ஓவர்கள் வீசி 1 ஓவரை மெய்டனாக்கி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்தியா 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ஹர்மன்ப்ரீத் - தீப்தி ஷர்மா ஜோடி 153 ரன்கள் எடுத்து அசத்தியது. இந்த பார்ட்னர்ஷிப் ரன் என்பது 5வது விக்கெட் அல்லது அதற்கு கீழே இந்தியாவிற்காக எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். இதற்கு முன்பு கடந்த 2022 மகளிர் உலகக்கோப்பையில் ஸ்நேகா ராணா - பூஜா ஜோடி 122 ரன்களை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

குறைந்த பந்துகளில் சதம்:

இந்திய அணிக்காக குறைந்த பந்துகளில் சதம் விளாசிய 5வது வீராங்கனை என்ற சாதனையை தீப்தி ஷர்மா படைத்தார். ஸ்மிரிதி மந்தனா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 50 பந்துகளில் சதம் விளாசியதே குறைந்த பந்துகளில் விளாசப்பட்ட ஒருநாள் போட்டி சதம் ஆகும்.

29 வயதான தீப்தி ஷர்மா இந்தியாவின் அசைக்க முடியாத சொத்தாக உள்ளார். இவர் இதுவரை 126 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 877 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 188 ரன்கள் விளாசியுள்ளார். 2 சதம், 18 அரைசதங்கள் விளாசியுள்ளார். சிறந்த சுழற்பந்துவீச்சாளரான தீப்தி ஷர்மா இதுவரை 171 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தியுள்ளார். இந்தியா முதன்முறையாக மகளிர் உலகக்கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணம் தீப்திஷர்மாவும் ஆவார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks