அல்பி மோர்கல் முதல் பெத்தி வரை... புதிய பயிற்சியாளர்கள் கூடாரத்தை உருவாக்கிய CSK!

அல்பி மோர்கல் முதல் பெத்தி வரை... புதிய பயிற்சியாளர்கள் கூடாரத்தை உருவாக்கிய CSK!
News Image

ஐபிஎல் வரலாற்றில் தனக்கென தனி வரலாறு கொண்ட அணியாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ். சிஎஸ்கே அணியைப் பொறுத்தமட்டில் கடந்த 3 வருடங்களாக அவர்களது செயல்பாடு அந்த அணியின் ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

வலுவாகும் சிஎஸ்கே:

ருதுராஜ் கேப்டன்சியில் அணி மிகப்பெரிய அளவில் அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 3 சீசன்களாக சிஎஸ்கே செயல்பாடு மோசமாக உள்ளது. இந்த நிலையில், சென்னை அணியின் பயிற்சியாளராக அடுத்த சீசன் முதல் ஸ்டீபன் ஃப்ளமிங்கிற்கு பதிலாக ஜாகிர்கான் செயல்பட உள்ளார்.

புதிய பயிற்சியாளர்கள்:

இதனால், சென்னை அணி மீது மீண்டும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில், சென்னை அணியின் மற்ற பயிற்சியாளர்கள் பதவிக்கும் முன்னாள் வீரர்களை நியமித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக மோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Coach Zak at the HQ, and Leo's ready with the FAQs! 💛 #WhistlePodu #LeoHotline https://t.co/lR3OSQIjpg
— Chennai Super Kings (@ChennaiIPL) October 27, 2026

சென்னை அணியின் புதிய உதவி பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரரான அல்பி மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு உதவி பயிற்சியாளராக கேரத் பேட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.  பீல்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் ஃபோஸ்டர் தொடர்ந்து சிஎஸ்கே அணியில் நீடிக்கிறார். உதவி பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் நம்பிக்கை:

ஜாகிர்கான் தலைமையிலான இந்த புதிய பயிற்சியாளர்கள் கூடாரம் சென்னை அணியை மீண்டும் வலுவான அணியாக உருவாக்கும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 38 வயதான மோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2013 முதல் 2015ம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். சிஎஸ்கே மட்டுமின்றி பஞ்சாப், டெல்லி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் ஆடியுள்ளார்.

120 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள மோகித் சர்மா இதுவரை 134 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஜாகிர்கானே மிகப்பெரிய பந்துவீச்சு ஜாம்பவனாக திகழும் நிலையில், மோகித் சர்மாவும் அணியில் இருப்பது சென்னை அணியை மேலும் வலுவாக்கியுள்ளது.

மீண்டும் இணைந்த அல்பி மோர்கல்:

சர்வதேச கிரிக்கெட்டிலும் புகழ்பெற்ற வீரராக உலா வந்தவர் அல்பி மோர்கல். 45 வயதான இவர் சென்னை அணிக்காக 2008 முதல் 2013ம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். ஆர்சிபி அணிக்காகவும், டெல்லி அணிக்காகவும் இவர் ஆடியுள்ளார். புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்காகவும் 2016ம் ஆண்டு விளையாடியுள்ளார்.

சென்னை அணிக்காக வரும் தொடரிலும் தோனி விளையாடுவாரா? என்பது சந்தேகமாக உள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வலுவான பயிற்சியாளர்களை சிஎஸ்கே நிர்வாகம் உருவாக்கியுள்ளது.

இந்த பயிற்சியாளர்களின் யுக்தியும், வியூகங்களும் அணிக்கு பலன் அளிக்குமா? என்பது அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தெரிய வரும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks