Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்

Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
News Image

Congress Rally Against CEC: த ராகுல் காந்தியின்  பேரணியை தடுக்கும்படி அவரது தாயாருக்கு டெல்லி வியாபாரிகள் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ரூ.12,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும்:

சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் நடவடிக்கை போன்றவற்றால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மத்தியில் ஆளும் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதன் நீட்சியாக தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ராம் லீலா மைதானத்தில் பிரமாண்ட பேரணியை நடத்த நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இந்த போராட்டத்தால் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால், அதனை ஒத்திவைக்க வேண்டும் என, டெல்லி வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

”தீபாவளி விற்பனை பாதிப்படையும்”

ராகுல் காந்தி முன்னெடுத்துள்ள பேரணியானது. சந்தைகள் தீபாவளி பண்டிகைக்குத் தயாராகி வரும் ஒரு முக்கியமான நேரத்தில் நடைபெறுவதாக வர்த்தக அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான கடிதத்தில், “பண்டிகைக் கால உச்சக்கட்ட ஷாப்பிங் பருவத்தில் திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்தால் கடுமையான பொருளாதார இழப்புகள் ஏற்படக்கூடும். இந்தப் பேரணி மத்திய டெல்லிக்கு சுமார் 10 லட்சம் மக்களையும், 15,000 முதல் 20,000 வாகனங்களையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சந்தைகள் முழுவதும் பொருட்கள் மற்றும் வாங்குபவர்களின் நடமாட்டத்தைப் பாதிக்கக்கூடும். 15,000 முதல் 20,000 வாகனங்கள் நிறுத்துவதற்குப் போதுமான இடம் இல்லாததால், பொதுமுடக்கத்தைப் போன்ற ஒரு முழுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். எனவே நவம்பர் 1ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள 10 லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணியை, தீபாவளிக்குப் பிறகான ஒரு தேதிக்கு மாற்றி அமைக்க வேண்டும்" என சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் வர்த்தக அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இடத்தை மாற்ற வலியுறுத்தல்:

தன்தேரஸ் நவம்பர் 6ம் தேதியும், தீபாவளி நவம்பர் 8ம் தேதியும் வருவதால், அதற்கான முன்னேற்பாடுகளில் வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பண்டிகைக்காலத்திற்கு தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதற்கு, நவம்பர் 1ம் தேதி மிகவும் பரபரப்பான நாட்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பண்டிகைக் காலத்தில் இடையூறுகளைத் தவிர்க்க, பேரணியை நவம்பர் 10ம் தேதிக்குப் பிறகு ஒத்திவைக்கலாம் அல்லது தேதியை மாற்ற முடியாவிட்டால் அதை புராரி மைதானத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்” எனவும் வர்த்தக அமைப்பு கோரியுள்ளது.

இதையும் படியுங்கள்: Hyundai Upcoming Car: கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்

டெல்லியின் முக்கிய சந்தைகள்:

சாந்தினி சௌக், சதர் பஜார், கன்னாட் பிளேஸ், பாலிகா பஜார், ஜன்பத், பகீரத் அரண்மனை, காரி பௌலி, காஷ்மீரி கேட், நயா பஜார், லஜ்பத் ராய் மார்க்கெட், சாவ்ரி பஜார், கினாரி பஜார், தரிபா கலன், பல்லிமாரன், ஃபதேஹ்புரி, கர்பிம் பஜ்ர், திலக் பாக், திலக் பாக். கஃபர் மார்க்கெட், அஜ்மேரி கேட்-பஹர்கஞ்ச் மற்றும் தர்யாகஞ்ச் ஆகியவை டெல்லியின் முக்கிய சந்தைகளாகும்.

300 ஆண்டுகள் பழமையான சில சந்தைகள் உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து பொருட்களை விநியோகம் செய்யப்படுகின்றன.  நரேலா, பவானா, ஓக்லா, மாயாபுரி, முண்ட்கா, உத்யோக் நகர் மற்றும் மங்கோல்புரி உள்ளிட்ட 56 தொழிற்பகுதிகளிலிருந்து தினமும் வரும் சுமார் 5,000 லாரிகள் மற்றும் டெம்போக்களையே இந்த சந்தைகளின் செயல்பாடுகள் சார்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks