தமிழகத்தில் மழை சேகரிப்பு திட்டத்தை மீண்டும் மக்கள் இயக்கமாக செயல்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2002ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது அந்த திட்டத்தை முதல்வர் விஜய் தற்போது கையில் எடுத்துள்ளார்.

இன்று மழைநீர் சேகரிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்கிறார். குடிநீர் பாதுகாப்பு, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல் ஆகியவற்றிற்கு மழை நீர் சேகரிப்பு மிகவும் அவசியம். மக்கள் தொகை பெருக்கம், விரைவான நகர மையமாக்கல், பருவமழை மாற்றம் காரணமாக மழைநீர் சேகரிப்பு மிக முக்கியமானதாகிறது. கடந்த 2002ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா மழை நீர் சேகரிப்பு மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்பட்டது. அதுபோல மீண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான அரசாணை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மழைநீர் சேகரிப்பு இல்லாத பழைய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இனி மழை நீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?

அரசாணை விவரம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு மிக முக்கியமான ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதுப்பித்து, அதை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக (Mass Movement) மாற்ற உத்தரவு!

இந்த உத்தரவை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார்.

2002-ல் போட்ட G.O-க்கு இப்போ புது உயிர்!

ஏற்கனவே 11.11.2002-ல் போடப்பட்ட http://G.O.No.158-ன் படி தமிழ்நாடு மழைநீர் சேகரிப்பில் முன்னோடி மாநிலம். இப்போ 24 வருஷம் கழிச்சு, பல இடங்களில் அந்த கட்டமைப்புகள் பழுதடைந்து, தூர் பிடித்து, செயல்படாமல் இருப்பதால், அவற்றை Rejuvenation (புத்துயிர்) செய்ய முடிவு!

பிரச்சாரத்தின் பெயர் என்ன?

*"IMPLEMENTATION OF RAIN WATER HARVESTING AS A MASS MOVEMENT - RENEWED INITIATIVES"*
அதாவது *"மழைநீர் சேகரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்துதல் - புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள்"*

4 முக்கிய நோக்கங்கள்

பழைய கட்டமைப்புகளை சீர் செய்தல்: அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகளில் உள்ள பழைய மழைநீர் தொட்டிகளை ஆய்வு செய்து, சுத்தம் செய்து, தூர் வாரி, உடைந்ததை சரி செய்தல்.

புதிய கட்டமைப்புகளை உருவாக்குதல்: Roof Top Harvesting மற்றும் Ground Water Recharge என புதிய கட்டிடங்களுக்கு மட்டுமல்ல, பழைய கட்டிடங்களுக்கும் கட்டாயம்!

விழிப்புணர்வு: மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை அவர்களின் சொந்த பொறுப்பாக மாற்றுவது.

கண்காணிப்பு: தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைத்து தொடர் கண்காணிப்பு!

முழு திட்டம் என்ன? - STATE-WIDE PRE-MONSOON CAMPAIGN!

வடகிழக்கு பருவமழைக்கு முன் மாநிலம் தழுவிய பருவமழைக்கு முந்தைய பிரச்சாரம் நடத்தப்படும்!

என்னென்ன வேலைகள் நடக்கும்?

* அனைத்து அரசு கட்டிடங்களிலும் மழைநீர் கட்டமைப்புகள் முழுமையாக செயல்படுகிறதா என ஆய்வு!
* மொட்டை மாடி, கால்வாய்கள், வடிகட்டும் அறைகள், செறிவூட்டும் குழிகள் சுத்தம் செய்யப்படும்!
சாலைகள், பொது இடங்களில் இருந்து வரும் மழைநீரை சேமிக்க Recharge Trenches, Recharge Shafts, Percolation Pits அமைக்கப்படும்!
* புதிய குடிநீர் திட்டங்களில் மழைநீர் சேகரிப்பு ஒரு பகுதியாகவே இருக்கும்! Check Dams, Soak Pits கட்டப்படும்!

மக்களுக்கு எப்படி விழிப்புணர்வு?

- TV, Radio, செய்தித்தாள், Social Media, Hoardings, சுவர் ஓவியங்கள், பேருந்து விளம்பரங்கள்!
- தெருமுனை பிரச்சாரம், குறும்படங்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிற்சி!
- சுய உதவிக்குழுக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மூலம் வீடு வீடாக பிரச்சாரம்!

விருதுகளும் உண்டு! - AWARDS!

சிறப்பாக செயல்படுபவர்களுக்கு அரசு விருது வழங்க உள்ளது!

* சிறந்த மாவட்டம்
* சிறந்த நகராட்சி / ஊராட்சி
* சிறந்த பள்ளி / கல்லூரி
* சிறந்த அரசு அலுவலகம்
* சிறந்த குடியிருப்போர் சங்கம்

நிலத்தடி நீர்மட்டத்தை Block-wise, Firka-wise கண்காணித்து, எங்கு தண்ணீர் அதிகரித்துள்ளது என்று Geo-tagging மூலம் புகைப்படத்துடன் ஆதாரம் வைக்கவும் உத்தரவு! இனி மழைநீர் சேகரிப்பு என்பது வெறும் சீசன் வேலை இல்லை, அது ஒரு தொடர் மக்கள் இயக்கம்! வீட்டுக்கு ஒரு மழைநீர் தொட்டி கட்டாயம் என்ற நிலையை கொண்டு வருவதே முதல்வர் விஜய் அரசின் இலக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article