தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள் என்றாலே பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தொடங்கி விட்டாலே அதனை தொடர்ந்து வரும் மூன்று மாதங்களும் பண்டிகை நாட்கள் தான். நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வரும். ஆகையால் இந்த மாதங்களில் அதிக விடுமுறை நாட்கள் வரும் என்பதால் பள்ளி மாணவர்கள் குஷியில் இருப்பார்கள்.

பள்ளி மாணவர்கள்

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. அன்றை தினம் புதிய உடை அணிந்து குடும்பத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை தொடர்ந்து அக்டோபர் மாதம் வந்தது. ஆனால் எந்த முறை நவம்பர் மாதத்தில் வருகிறது.

இதையும் படிங்க: CM Vijay: ஜெயலிலதா பாணியை கையில் எடுக்கும் முதல்வர் விஜய்.. இனி தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே வராது.!

தீபாவளி பண்டிகை

எப்போது தீபாவளி பண்டிகை வரும், எத்தனை நாட்கள் விடுமுறை வரப்போகிறது உற்சாக கொண்டாடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த பள்ளி மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது இந்த முறை தீபாவளி பண்டிகை வார விடுமுறை நாட்களான நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

தீபாவளி மறுநாள் விடுமுறை

பொதுவாக, தமிழகத்தில் தீபாவளிக்கு மட்டுமே அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்ப வருவதற்காகவும், ஒரு சிலர் தீபாவளிக்கு மறுநாள் நோன்பு அனுசரிப்பார்கள் என்பதாலும் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்றும் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நவம்பர் 9ம் தேதி வரும் நோன்பு பண்டிகைக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: School Holiday: பள்ளி மாணவர்கள் மீண்டும் கொண்டாட்டம்! அக்டோபர் 22 விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களுக்கு?

தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை

ஆகையால் நவம்பர் 9ம் தேதி திங்கள்கிழமை அரசு விடுமுறை அளிக்கும் பட்சத்தில் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது நவம்பர் 7ம் தேதி சனிக்கிழமை வந்து விடுகிறது. மேலும் நவம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை தீபாவளி, 9 திங்கள் நோன்பு வருகிறது. வார விடுமுறை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என 4 நாட்கள் தொடர் விடுமுறையை அடுத்து தீபாவளிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு சந்தோஷத்தில் உள்ளனர்.

Source: Read Full Article