CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ

CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
News Image

CM Vijay Andhra Schedule: முதலமைச்சர் விஜய் ஒருநாள் பயணமாக இன்று ஆந்திரப்பிரதேசம் பயணிக்க உள்ளார்.

முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம்:

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் நிர்வாக ரீதியாகவும் சொந்தப் பணிகள் காரணமாகவும் அவ்வப்போது பயணம் மேற்கொண்டு வருகிறார். டெல்லியை தாண்டி கர்நாடகா மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு கடந்த ஜுன் மாதம் சென்று இருந்தார். அதன் தொடர்ச்சியாக சில மணி நேர பயணமாக இன்று ஆந்திரா செல்லவிருக்கிறார். இதில் அரசாங்க ரீதியான திட்டங்களோடு, பிரபல கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தும் திட்டத்தையும் முதலமைச்சர் விஜய் கொண்டுள்ளாராம். அதுதொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பயணத்தின் போது நீர்வள அமைச்சர் என். ஆனந்த், தலைமை செயலாளர் சாய்குமார் உள்ளிட்டோரும் முதலமைச்சர் உடன் செல்ல உள்ளனர்.

இதையும் படியுங்கள்: TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை

CM விஜய் - ஆந்திரா பயண விவரம்

பிற்பகல் மூன்று மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆந்திரா புறப்படுகிறார்

மாலை நான்கு மணியளவில் விஜயாவாடாவில் கன்னாவரம் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்குகிறார்

சுமார் 4.10 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 30.5 கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக பயணித்து கனக துர்கா அம்மன் கோயிலுக்கு செல்கிறார்

4.55 மணி தொடங்கி சுமார் 1 மணி வரை கோயிலில் வழிபாடு நடத்துகிறார்

5.45 மணியளவில் கோயிலில் இருந்து புறப்பட்டு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இல்லத்தை நோக்கி பயணத்தை மேற்கொள்கிறார்

6 மணி தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் திட்டமிடப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு உடனான சந்திப்பில், காவிரி - கோதாவரி நதிகளை இணைப்பது மற்றும் இருமாநில உறவு உள்ளிட்ட விவரங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் உடனிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

7 மணியளவில் சந்திப்பு நிறைவுற்ற பிறகு புறப்படும் முதலமைச்சர் விஜய் புன்னமி கடற்கரை பகுதியில் நடைபெறும் உற்சவ நிகழ்ச்சிகளில் சுமார் ஒரு மணி நேரம் பங்கேற்கிறார்

உற்சவ நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சுமார் 8 மணியளவில் விமான நிலையத்தை நோக்கி புறப்படுவார்

8.50-க்கு விமான நிலையத்தை சென்றடையும் முதலமைச்சர் விஜய், சுமார் 9 மணியளவில் சென்னை நோக்கி புறப்படுகிறார்

10 மணிக்கெல்லாம் முதலமைச்சர் விஜய் சென்னை திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம்

கோதாவரி - காவிரி நதி இணைப்புத் திட்டம் என்பது மகாராஷ்டிராவில் உற்பத்தியாகும் கோதாவரி ஆற்றின் உபரி நீரைத் தெலங்கானா, ஆந்திரா வழியாகத் தமிழகத்தின் காவிரி வடிநிலப் பகுதிக்குக் கொண்டுவரும் ஒரு முக்கிய தேசிய தொலைநோக்குத் திட்டமாகும். தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தின் ஈஞ்சம்பள்ளி அணையில் இருந்து கோதாவரி நீரை எடுத்து, கிருஷ்ணா (நாகார்ஜுன சாகர்) மற்றும் பெண்ணாறு (சோமசிலா) வழியாகத் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள கல்லணை வரை இணைக்கும் வகையிலான 3 பகுதிகளை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது. இந்த திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையின்படி, தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 84 டி.எம்.சி (சுமார் 2,379 மில்லியன் கன மீட்டர்) நீர் ஒதுக்கீடு செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயப் பாசனத்திற்கு 1,343 மில்லியன் கன மீட்டரும், குடிநீருக்கு 345 மில்லியன் கன மீட்டரும் அடங்கும்.
இதனால்  திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்கள் பாசன வசதி பெறும். இத்திட்டத்தை விரைவுபடுத்த, இதனை ஒரு தேசியத் திட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks