CM Vijay: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.5 கோடியாக உயர்வு.. முதல்வர் விஜய்

CM Vijay:  ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.5 கோடியாக உயர்வு.. முதல்வர் விஜய்
News Image

ஜப்பானின் உள்ள அய்ச்சி மாகாணத்தின் நகோயா நகரில் செப்டம்பர் 19ம் தேதி முதல் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. 16 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் 46 நாடுகளில் இருந்து சுமார் 11,000 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். 43 விளையாட்டுகளில் 469 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், இந்தியாவை பொருத்தவரை 495 வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்று 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என 85 பதக்கங்களுடன் 4வது இடம் பிடித்தது.  இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வீரர், வீராங்கனைகள் 18 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

ட்ரீம்ஸ் ஒலிம்பிக்ஸ் 2036

இந்நிலையில் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று அசத்தியவர்களுக்கு பாராட்டு விழா சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் மிகவும் கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஆசிய விளையாட்டு வரலாற்றை தாங்கி நிற்கும் நினைவுப் பரிசை முதல்வர் விஜய்க்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழங்கினார்.  மேலும் சென்னையில் நடந்த விழாவில் ட்ரீம்ஸ் ஒலிம்பிக்ஸ் 2036  (Dream Olympics 2036) என்ற திட்டத்தை முதல்வர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.

ரூ.1 லட்சம் உதவித்தொகை

இத்திட்டத்தின் கீழ் ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் அனைத்து வீரர், வீராங்கனைகளும்  நேரடியாக சேர்க்கப்பட்டு ஊக்கவிக்கப்படுவர். தேர்வாகும் வீரர்களுக்கு உயர்தரப் பயிற்சிக்காக ஆண்டிற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியுடன், அவர்களின் தினசரித் தேவைகள் மற்றும் பராமரிப்பிற்காக மாதந்தோறும் ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

ஊக்கத்தொகை ரூ.5 கோடி

குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.5 கோடியும், வெள்ளி வென்றால் ரூ.3 கோடியும், வெண்கலம் வென்றால் ரூ.2 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks