CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?

CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
News Image

இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய ஒன்றாக திகழ்ந்தது எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் ஆகும். போலி வாக்காளர்களுக்காக இது கொண்டு வரப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தாலும், இதன் மூலமாக ஏராளமான வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எஸ்ஐஆர் விவகாரம்:

இந்த நிலையில், எஸ்ஐஆர் விவகாரத்தில் ஏற்பட்ட முறைகேட்டிற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரே பொறுப்பேற்க வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. மேலும், அவர் தனது தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அறிவித்து போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

சிஜேபி போராட்டம்:

இதன்படி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இன்று தனது போராட்டத்தை டெல்லி ஜந்தர்மந்தரில் நடத்துகிறது. நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று இவர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். சிஜேபி கட்சியின் இந்த போராட்டம் மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது.

பலத்த பாதுகாப்பு:

இந்த சூழலில், மீண்டும் டெல்லியில் இவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இவர்களின் போராட்டம் காரணமாக டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் என சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் இன்று நடைபெற உள்ள இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் தற்போது வரை அனுமதி அளிக்கவில்லை. ஆனால், கடந்த முறை நடந்த போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக முன்வந்து பங்கேற்றதால் இந்த போராட்டத்திலும் பலரும் பங்கேற்பார்கள் என்று கருதப்படுகிறது.

ரயில்கள், இணைய சேவை ரத்து:

இந்த போராட்டத்தை முன்னிட்டு டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், போராட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள 4 கிலோமீட்டர் பகுதியில் இணைய சேவையை முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு சிபிஐ கட்சியின் மாணவர் அமைப்பான ஏஐஎஸ்ஐ அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், இந்த போராட்டத்திற்கு பாரதிய கிஷான் சங்கம் எனும் விவசாயிகள் அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.

மக்கள் எதிர்பார்ப்பு:

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் கடந்த போராட்டம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. இதனால், இந்த போராட்டமும் எந்த திசையில் பயணிக்கும் என்று அரசியல் கட்சிகளும், மக்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks