Chennai Traffic Infra: கலங்கரை விளக்கம்–அடையார் மேம்பாலம், வியாசர்பாடி மற்றும் பேசின் மேம்பாலத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட 5 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

சென்னை போக்குவரத்து தீர்வுக்கான 5 திட்டங்கள்:

வேகமாக வளர்ந்து மற்றும் விரிவடைந்து வரும் சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசல் என்பது மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னைக்கான ஐந்து புதிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான விர்வான திட்ட அறிக்கையை தயாரிக்க, 98 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கி மாநில நெடுஞ்சாலைத்துறை நிதி ஒதுக்கியுள்ளது. இவை முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் போது நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.

புதிய உட்கட்டமைப்பு திட்டங்களின் விவரங்கள்:

மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து திட்டங்களில் மலர் மருத்துவனை அருகில் கலங்கரை விளக்கத்திலிருந்து மேம்பால சாலை அமைப்பதும் அடங்கும். பட்டினப்பாக்கத்திலிருந்து லூப் ரோட் வழியாக மலர் மருத்துவமனை அருகே உள்ள அடையார் இறங்குதுறை வரை இந்த மேம்பாலம் அமையலாம் என அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக வியாசர்பாடி சாலை மேம்பாலத்தின் ஒரு பகுதியை மாதவரம் நோக்கி நீட்டிப்பது, வட சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பேசின் பாலத்தில் மேம்பாலத்தை அகலப்படுத்துவது, ஜவஹர்லால் நேரு சாலையின் (உள்வட்டச் சாலை) திருமங்கலம்-கோயம்பேடு பகுதியில் உள்ள கோயம்பேடுவில் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை அகலப்படுத்துவது மற்றும் ராஜீவ் காந்தி சாலைக்கும் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும் இடையே ஒரு இணைப்புச் சாலையை அமைப்பது ஆகியவையும் புதிய முன்மொழியப்பட்ட திட்டங்களில் அடங்கும். நான்கு திட்டங்களுக்கு தலா ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒரு திட்டத்திற்கு ரூ.18 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என அரசாணை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாந்தோம் நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வு

மாநில நெடுஞ்சாலைத் துறை தகவல்களின்படி, பட்டினப்பாக்கத்தில் இருந்து லூப் ரோட் வழியாகத் தொடங்கி, மலர் மருத்துவமனை அருகே உள்ள அடையார் இறங்குதுறையில் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. அதிகபட்ச போக்குவரத்து நெரிசல் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலைக் காணும் சாந்தோம் நெடுஞ்சாலையில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாம். வழித்தடத்தின் நீளம் மற்றும் அகலம் உள்ளிட்ட பிற வடிவமைப்பு அளவுருக்கள், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பின் போது தெரியவரும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்

வடசென்னை நெரிசலுக்கான திட்டங்கள்

1,720 மீட்டர் நீளமுள்ள Y-வடிவ வியாசர்பாடி மேம்பாலத்தின் ஒரு பகுதியை மாதவரம் நோக்கி நீட்டிக்க மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. பேசின் பாலம் அருகே தொடங்கும் இந்தப் பாலம், இரண்டு பகுதிகளாகப் பிரிகிறது. ஒன்று மூலக்கடை, மாதவரம் மற்றும் புழல் ஆகியவற்றை இணைக்கிறது. மற்றொன்று உள்ளூர் போக்குவரத்திற்காக கல்யாணபுரம் அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலைக்குச் செல்கிறது. கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி மற்றும் புரசைவாக்கம் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய பாலமான பேசின் பிரிட்ஜ் சந்திப்பில் உள்ள குறுகலான மேம்பாலமும் அகலப்படுத்தப்பட உள்ளது.

பீக் ஹவர்ஸ் எனப்படும் உச்ச நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலைக் காணும் கோயம்பேடு பகுதியில், கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தற்போதைய ஆறு வழிப் பாலத்தை அகலப்படுத்தவும் அந்தத் துறை பரிந்துரைத்துள்ளது. ராஜீவ் காந்தி சாலையையும் கிழக்கு கடற்கரைச் சாலையையும் இணைக்கும் ஒரு இணைப்புச் சாலை முன்மொழியப்பட்டுள்ளது. அதன் சீரமைப்பு மற்றும் அமைவிடம், விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பின் போது கண்டறியப்படும்.

Source: Read Full Article