Chennai Power Cut: சென்னை மக்களுக்கு அதிர்ச்சி.. நாளை ஞாயிற்றுக்கிழமை அதுவுமா 5 மணிநேரம் மின்தடை!

Chennai Power Cut: சென்னை மக்களுக்கு அதிர்ச்சி.. நாளை ஞாயிற்றுக்கிழமை அதுவுமா 5 மணிநேரம் மின்தடை!
News Image

தலைநகர் சென்னையில் பகல் நேரங்களில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். குறிப்பாக வயதானவர்கள். அதுமட்டுமல்ல புழுக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டில் எந்நேரமும் ஃபேன், ஏசி உள்ளிட்டவைகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

மாதாந்திர பராமரிப்பு பணி

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

ஞாயிற்றுக்கிழமை மின்தடை

இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி நாளை தினம் (11-10-2026) அதாவது ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை

ஆவின் மெயின் ரோடு, 8வது தெரு, பொன்னியம்மன் நகர், டிஏஎஸ் எஸ்டேட், சிட்கோ 7வது தெரு, கோரமண்டல் டவுன், பஜனை கோயில் தெரு, பாடசாலை தெரு, கன்னியப்பன் தெரு, கோச்சார் குடியிருப்புகள், 2வது பிரதான சாலை, 2வது குறுக்குத் தெரு பிரதான சாலை, 4வது தெரு, 5வது தெரு, 11வது தெரு, ரெட்டி பாளையம் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks