பொதுமக்களுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்குவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். மின்தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுது நீக்குதல், மரக்கிளைகள் வெட்டுவது, மின் கம்பிகள் மாற்றுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

மாதாந்திர பராமரிப்பு பணி

இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி நாளை தினம் (14-10-2026) அதாவது புதன் கிழமை சென்னையில் எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பதை பார்க்கலாம்.

இதையும் படிங்க: School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

ஜே.ஜே.நகர்

திவ்யம் அபார்ட்மென்ட், ஆலமரம், ஜெயரத்தினம் அபார்ட்மென்ட், மோகபைர் ஏரி-ஸ்கீம், பஜனை கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதி அடங்கும்.

இதையும் படிங்க: வீர வசனம் பேசிய முதல்வர்.. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதலா? தவெக அரசு மீது இபிஎஸ் மெகா ஊழல் புகார்!

ஆவடி

கலைஞர் நகர், கோவில்பதாகை மெயின் ரோடு, பூம்பொழில் நகர், மசூதி தெரு, கன்னட பாளையம், திருமுல்லைவாயல் சாலை, கோவில்பதாகை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article