சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(08.10.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், அக்டோபர் 8-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்

மாடம்பாக்கம், வேங்கைவாசல், மப்பேடு, அகரம்தென், படுவாஞ்சேரி, கஸ்பாபுரம், செக்ரடேரியட் காலனி, கேம்ப் ரோடு, செம்பாக்கம், அகரம் மெயின் ரோடு, சேலையூர், விஜிபி சீனிவாச நகர், விஜிபி சரவணா நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நூத்தஞ்சேரி, கணபதி நகர், அலமேலுபுரம், கண்ணன் நகர், இந்திரா நகர், சோழன் நகர், சுதர்சன் நகர், டியானா ஸ்கை சிட்டி, திருமால் நகர், அன்னை சத்யா நகர், கணேஷ் நகர், மாருதி நகர் மற்றும் ஸ்ரீ தேவி நகர்.

கடப்பேரி

MEPZ பகுதி, மௌலானா நகர், சிங்காரவேலன் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, ரங்கநாதபுரம், காதர் பாய் தெரு, கண்ணன் தெரு, ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, ரமேஷ் நகர், RV கார்டன், துரைசாமி பிள்ளை தெரு, MR தியேட்டர், முடிச்சூர் சர்வீஸ் சாலை, மார்க்கெட் பகுதி, கார்ப்பரேஷன் அலுவலகம், ஜட்ஜ் நகர் எம் வீதி, காமக்கொடி நகர், காந்தி காலனி. வள்ளுவர் குருகுலம்.

ராஜகீழ்பாக்கம்

வேளச்சேரி மெயின் ரோடு, மேத்தா நகர் மெயின் ரோடு, மகாலட்சுமி நகர் மெயின் ரோடு, மாருதி நகர், கோமதி நகர், ஐயப்ப நகர், விவேகானந்தன் தெரு, ராசுகி தெரு, வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, திருமகள் நகர், ஐஓபி காலனி, கேம்ப் ரோடு, அம்பேத்கர் நகர், ராஜீவ் காந்தி நகர், கலைஞர் கருணாநிதி நகர், துர்கா காலனி, வெங்கடரமணன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், மணவாள நகர் மற்றும் ஏரிக்கரை தெரு.

ராமாபுரம்

ஐபிஎஸ் காலனி, மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், ராமச்சந்திரா நகர், கெருகம்பாக்கம், நெசப்பாக்கம், வெங்கடேஸ்வரா நகர், ஜெய் பாலாஜி நகர், கான் நகர் மற்றும் கே.கே. பொன்னுரங்கம் சாலை.

திருவேற்காடு

சுந்தரசோழபுரம், ராம் நகர், சுந்தரவிநாயக நகர், செல்லியம்மன் நகர், கிரீன் பார்க், சக்கரேஸ்வரி நகர்.

குன்றத்தூர்

முருகன் கோவில் பகுதி, டெம்ப்பிள் டவுன், மேலந்தை எஸ் தெரு, பல்லவராயன் குளக்கரை தெரு, ராஜராஜேஸ்வரி நகர், ரங்கநாதன் நகர், நல்லேஸ்வரர் நகர், பண்டாரம் தெரு, ஜெகநாதபுரம், பூஜா அவென்யூ, பாபு நகர், குமரன் நகர், அக்‌ஷயா அடுக்குமாடி குடியிருப்பு, தங்கம் அவென்யூ மற்றும் மகாத்மா காந்தி நகர்.

திருவான்மியூர்

3-வது மற்றும் 4-வது மெயின் ரோடு, காமராஜ் நகர், பிடிசி டிப்போ, திருவள்ளுவர் சாலை, 5 முதல் 24-வது கிழக்கு தெரு, காமராஜ் நகர், தெற்கு அவென்யூ மற்றும் மங்கலேரி.

பெசன்ட் நகர்

எஸ்பிஐ காலனி, எல்லையம்மன் கோயில் தெரு, ஜெயராம் அவென்யூ, மற்றும் சாஸ்திரி நகர் 3-வது, 7-வது, 11-வது, 12-வது மற்றும் 14-வது குறுக்குத் தெருக்கள்.

முடிச்சூர்

ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சாரங்க அவென்யூ, கேப்டன் சசிகுமார் நகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, மேட்டு தெரு, பஞ்சாயத்து போர்டு ரோடு மற்றும் சக்ரா அவென்யூ.

குரோம்பேட்டை

ராதா நகர், லட்சுமி நகர் 2-வது தெரு, கண்ணன் நகர் மற்றும் விரிவாக்கம், ஸ்டேஷன் பார்டர் ரோடு, பத்மாவதி நகர், கிழக்கு புதுவை நகர், ஜோசப் காலனி, சஞ்சய் காந்தி நகர், ஜாய் நகர், பிஎஸ்ஆர் குடியிருப்புகள், சீனிவாசபுரம், சாந்தி நகர் 1-வது மற்றும் 2-வது தெருக்கள், வைஷ்ணவ் கல்லூரி, ஜிஎஸ்டி சாலை, நியூ காலனி 1-வது தெரு மற்றும் சாஸ்திரி காலனி.

மேடவாக்கம்

தோஷி அடுக்குமாடி குடியிருப்பு, வள்ளி நகர், தளபதி ஸ்டாலின் தெரு, புனிதவதி காலனி 1 முதல் 6-வது தெருக்கள், திருவள்ளுவர் தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், அந்தோணி நகர், பஜனை கோயில் தெரு மற்றும் நூக்கம்பாளையம் சாலை.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article