Chennai GST Road: ஒரே லைனில் பேருந்து, ரயில், மெட்ரோ சேவைகள்..! ரூ.2.117 கோடியில் சென்னையில் மெகா அப்க்ரேட்

Chennai GST Road: ஒரே லைனில் பேருந்து, ரயில், மெட்ரோ சேவைகள்..! ரூ.2.117 கோடியில் சென்னையில் மெகா அப்க்ரேட்
News Image

சென்னையில் பேருந்து, ரயில், மெட்ரோ சேவைகள் உள்ளிட்டவற்றை ஒரே கோட்டில் இணைப்பதற்கான மாதிரி நகர்ப்புற போக்குவரத்து வழித்தடங்கள் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.2,117 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மேம்பட்ட சாலை வழித்தடங்கள்:

மாதிரி நகர்ப்புற போக்குவரத்து வழித்தடங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கொண்டுவர, ஜிஎஸ்டி எனப்படும் க்ராண்ட் சதர்ன் ட்ரங்க் சாலை மற்றும் வேளச்சேரி-தாம்பரம் சாலை உள்ளிட்ட மேலும் பல சாலைப் பகுதிகளையும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) முன்மொழிந்துள்ளது. இந்த வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,  இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இந்த வாரம் கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதற்கட்டத்தின் கீழ், பழைய மகாபலிபுரம் சாலை (OMR) மற்றும் பல்லாவரம்-துரைப்பாக்கம் ஆரச் சாலையை மாதிரி நகர்ப்புற போக்குவரத்து வழித்தடங்களாக மாற்றுவதற்கு CUMTA ஏற்கனவே முன்மொழிந்துள்ளது. இதற்காக விடுக்கப்பட்ட டெண்டர் தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த இரண்டு சாலைப் பகுதிகளுக்குமான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயார் செய்ய தற்போது மறுடெண்டர் விடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு

32.4KM நீளத்திற்கான நவீன வழித்தடங்கள்:

முதல் கட்டத் திட்டமானது, மத்திய கைலாசிலிருந்து கேளம்பாக்கம் வரையிலான 25 கிலோ மீட்டர் நீளத்திற்கான ஓம்ஆர் சாலையையும், பல்லாவரம் பாலத்திலிருந்து துரைப்பாக்கம் சந்திப்பு வரையிலான 7.4 கிலோ மீட்டர் நீளத்திற்கான பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையையும் உள்ளடக்கியதாகும்.  இரண்டாம் கட்ட முன்மொழிவு என்பது, முதற்கட்டத்தை போன்ற சீரமைப்புப் பணிகளுக்காக தரமணி இணைப்புச் சாலை, மர்மலாங் பாலம்-வாலஜா சாலை, வேளச்சேரி-தாம்பரம் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

வழித்தடங்களுக்கான வசதிகள் என்ன?

ரயில் நிலையங்கள், MRTS நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுடன் இணைக்கப்பட்ட முதன்மைப் போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் இறுதிக்கட்ட இணைப்பு மற்றும் பல்முனைப் போக்குவரத்து ஒருங்கிணைப்பை அதிகரிக்கப்பட உள்ளது. மேம்பாலங்கள் மற்றும் தரைப்பிரிப்பான்களுக்குக் கீழேயும், சுரங்கப்பாதைகளுக்கு மேலேயும், பூங்காக்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட சாலைகளுக்கு மேலேயும் உள்ள பொது இடங்களும் மேம்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் மேக்படுத்தப்பட உள்ளது.

பசுமையான மையத்தடுப்புகளுடன் கூடிய சீரான சாலைப் பாதைகள், பிரத்யேக சர்வீஸ் ரோட்கள், சிறுபாலங்கள் மற்றும் பாலங்களின் புனரமைப்பு மற்றும் அகலப்படுத்துதல், தரைமட்டப் டிவைடர்கள், பாதசாரிகளுக்கான வசதிகள், போக்குவரத்து வேகக் குறைப்பு நடவடிக்கைகள், பசுமை வழித்தடங்கள், பிரத்யேக பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நிறுத்துமிடங்கள், வாகன நிறுத்துமிட வசதிகள் மற்றும் மிதிவண்டி உள்கட்டமைப்பு ஆகியவை இடம்பெற உள்ளது.

வழித்தடங்களின் நோக்கம் என்ன?

நடைபயணம் மற்றும் மிதிவண்டிப் பயன்பாட்டை ஊக்குவித்தல், தனியார் வாகனப் பயன்பாட்டை குறைக்கச் செய்தல், முக்கிய சந்திப்புகளில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நிற்பதை தவிர்ப்பது மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம், போக்குவரத்துத் துறையிலிருந்து ஆண்டுதோறும் தனிநபர் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் குறைப்பதில் அல்லது தற்போதைய நிலையைத் தக்கவைப்பதில் இந்த விரிவான திட்ட அறிக்கை (DPR) கவனம் செலுத்த உள்ளதாம். இரண்டாம் கட்டப் பணிகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ள சாலைகளின் மொத்த நீளம் உள்ளிட்ட விவரங்கள் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டவுடன் தெரியவரும். முன்மொழியப்பட்ட வழித்தடங்கள், சாலை வலையமைப்புடன் விரிவான சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டையும் உள்ளடக்கி, மோட்டார் வாகனமற்ற போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்கும்.

திட்டம் எப்போது முடிவடையும்?

விரிவான திட்ட அறிக்கைகளை  ஆணையம் தயாரிக்க அதை மாநில நெடுஞ்சாலைத் துறை ச் செயல்படுத்த உள்ளதாம். OMR மற்றும் ரேடியல் சாலையைப் பொறுத்தவரை, மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த பிறகு மாதிரி வழித்தடங்களுக்கான குடிமைப் பணிகள் மேற்கொள்ளப்படும். மெட்ரோ பணிகள் முடிவடைவதற்கு முன்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் சாலை மீண்டும் சேதமடையும் என்பதால், இப்பணிகள் நிறைவடைய சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் முதல்கட்டத்திற்கு தமிழ்நாடு அரசு இரண்டாயிரத்து 117 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks