Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி

Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
News Image

Chennai Airport Expansion: சென்னை விமான நிலையத்தை அடுத்த 20 ஆண்டுகளுக்கு தேவையான திறன்களுடன் மேம்படுத்துவதற்கான திட்டம் இருப்பதாக, இந்திய விமான நிலைய நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.

விமான நிலைய விரிவாக்க திட்டம்:

விவசாயிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. இதையடுத்து மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான தேவை அதிகரித்துள்ளது.  இதற்கான இரண்டு கட்ட திட்டங்களை இந்திய விமான நிலைய நிர்வாக ஆணையம் வகுத்துள்ளதாம். அதன் வாயிலாக புதிய க்ரீன் ஃபீல்ட் விமான நிலையத்தை உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை அவகாசம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய விமான நிலையத்திற்கான இடம் இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில், இந்திய விமான நிலைய நிர்வாக ஆணையத்தின் திட்டமானது ஏற்கனவே உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பயணிகளை கையாளும் திறனை மேம்படுத்தும் என நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

மணிக்கு 45 விமானங்கள் இலக்கு:

தற்போதைய சூழலில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன. முதற்கட்டமாக அந்த எண்ணிக்கையை 36 ஆகவும், காலப்போக்கில் நீண்ட கால இலக்காக 45 ஆகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாம். ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட இந்த விமான நிலையமானது, 2.4 சதவிகித வளர்ச்சியுடன் தற்போது ஆண்டுக்கு 2.3 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் முடிவடைந்தால் விமான நிலையத்தின் பயணிகளை கையாளும் திறன் 3.5 கோடியாக உயருமாம். அதன்படி, முதல் முனையம் 1 கோடி பேரையும், இரண்டாவது மற்றும் மூன்றாவது முனையம் 1.6 கோடி பேரையும் மற்றும் நான்காவது முனையம் 90 லட்சம் பேரையும் ஆண்டுக்கு கையாளும் என இந்திய விமான நிலைய நிர்வாக ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்: TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக

அதிகரிக்கும் வெளியேறும் வழிகள்:

விமானங்கள் ஓடுபாதையில் இருந்து விரைந்து வெளியேறுவதற்கான விரைவு வெளியேறும் பாதைகள், மார்ச் 2028-க்குள் கட்டி முடிக்கப்பட உள்ளன. அதன்படி பிரதான ஓடுபாதையில் ஏழும், இரண்டாம் நிலை ஓடுபாதையில் மூன்று விரைவு வெளியேறு பாதைகள் அமைக்கப்பட உள்ளன.  விவாகன நிறுத்தம் விமான நிலையத்தின் மற்றொரு முக்கியமான தடையாக உள்ளது. ஒன்பது உள்நாட்டு மற்றும் நான்கு சர்வதேச விமானப் பாலங்கள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளதால், விமானங்கள் தொலைதூர நிறுத்துமிடங்களில் நிறுத்தப்பட்டு, பயணிகள் அங்கிருந்து பேருந்துகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றனர். ஏப்ரல் 2027-க்குள் 17 விமானப் பாலங்களையும் 23 நிறுத்துமிடங்களையும் அமைக்க விமான நிலையம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், சென்னை விமான நிலையம் ஒரே நேரத்தில் 23 விமானங்களைக் கையாளும் திறனை பெறக்கூடும்.

மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம்:

மூன்றவாது முனையம் திறக்கப்படும் வரை, சர்வதேச தொலைதூர நிறுத்தங்களைப் பயன்படுத்த உள்நாட்டு விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. தற்போது நான்காவது முனையம் பாதி அளவிலான சுமையைக் கையாளுகிறது. புதிய முனையம் போக்குவரத்தை இன்னும் பரவலாக்க்கும். அதோடு 2015-ல் விமான நிலையத்தை மூட வழிவகுத்த வெள்ளப்பெருக்கு பிரச்னை மீண்டும் ஏற்படாமல் இருக்க, மழைநீர் வடிகால் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுவரை மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து அம்சங்களும் இந்திய விமான நிலைய் நிர்வாக ஆணையம் வகுத்துள்ள இரண்டு கட்ட திட்டங்களின் முதற்கட்டமாகும்.

வேகமெடுக்கும் ஐந்தாவது முனைய பணிகள்:

இரண்டாம் கட்டப் பணிகள், தற்போது தொலைதூர வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்படும் விமான நிலைய நிலத்தில், ஆண்டுக்கு 2 கோடி பயணிகளை கையாள்வதற்கான ஐந்தாவது முனையத்தை அடிப்படையாக கொண்டதாகும். இதற்காக புதியதாக நிலம் கையகப்படுத்தத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முனைய திட்டமானது NH32 மற்றும் வெளிவட்டச் சாலையுடன் இணைக்கும் ஒரு மேம்பாலப் பாதையையும் உள்ளடக்கியுள்ளது. மாநில அரசு நான்கு வழி மற்றும் ஆறு வழி வடிவமைப்புகளைச் சமர்ப்பித்துள்ளது, ஆனால் விரிவான திட்ட அறிக்கை இன்னும் தொடங்கப்படவில்லை. விமான நிலையம், T5 முனையத்திற்கும் தற்போதுள்ள முனையங்களுக்கும் இடையே ஒரு சுரங்கப்பாதை போன்ற இணைப்பை ஏற்படுத்துவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறதாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks