பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேடையில் அமர வைக்கப்பட்ட விஷயம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

பிரதமர் மோடியின் சென்னை பயணம்

பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை, அம்ரித் பாரத் திட்டம் கீழ் புரனமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள், புதிய ரயில் மேம்பாலங்கள், ஐஐடி மூளை ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று சென்னை வருகை தந்தார். முதலமைச்சர் விஜயுடன் இணைந்து அவர் இதுதொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின் மெட்ரோ ரயிலில் முதலமைச்சர் விஜயுடன் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

நயினார் நாகேந்திரனால் வெடித்த சர்ச்சை

இதனிடையே சென்னை ஐஐடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மேடையில் நயினார் நாகேந்திரனுக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இது சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனை குறிப்பிட்டு கருத்து தெரிவித்த காங்கிரஸ் மாநில தலைவரும், எம்பியுமான மாணிக்கம் தாகூர், “இது மத்திய அரசு நிகழ்ச்சி. இதற்கு ஒரு நடைமுறைகள் உள்ளது. எம்.எல்.ஏ., எம்பி, அமைச்சர்கள் போன்றோர் தான் மேடையில் அமரலாம் என்பது விதிமுறைகளாக பின்பற்றப்படுகிறது. ஆனால் நயினார் நாகேந்திரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் எப்படி மேடையில் அமர வைக்கப்பட்டார்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதனை குறிப்பிட்டு தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரும் பேசினார். மத்திய அரசு நிகழ்ச்சிகளில் அவர்களின் கட்சி கட்சியைச் சேர்ந்தவர்களை அமர வைப்பது தவறான முன்னுதாரணம். இது தவிர்க்கப்பட வேண்டும். எம்.எல்.ஏ., எம்பி இல்லாத நிலையில் நயினார் நாகேந்திரன் எந்த அடிப்படையில் அமர்ந்தார் என தெரியவில்லை. கட்சிக்காரர்களை பிரபலப்படுத்த அரசு நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தக்கூடாது. இதுபோன்று இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் செயல்பட்டால் நிலைமை என்னவாகும்?.. தவெக நிர்வாகிகளை கூட அரசு பள்ளிகளுக்கு கூட போகக்கூடாது என சொல்லி வைத்துள்ளோம். இது தவிர்க்கப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

த்ரிஷாவுக்கு மட்டும் முன் வரிசையா?

இந்த நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பங்கேற்ற மேடையின் முன்வரிசையில் அரசுப்பொறுப்பில் இல்லாத நயினார் நாகேந்திரன் எப்படி அமரலாம்? எனக் கேட்டிருக்கிறார் மாணிக்கம் தாகூர். அதனை அமைச்சர் நிர்மல்குமாரும் வழிமொழிந்திருக்கிறார்.நயினார் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டது குறித்தான கேள்வி மிக நியாயமானது; ஏற்புடைய வாதம்! அதேசமயம், சுதந்திர தின விழா மேடையின் முன்வரிசையில் எந்த அடிப்படையில் நடிகை திரிஷா அமர வைக்கப்பட்டார்? என்பதை விளக்கினால், நன்றாக இருக்கும்” என பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Source: Read Full Article