Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்

Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
News Image

Chennai Airport T5 Elevated Corridor: சென்னை விமான நிலைய மேம்பாட்டிற்கு புதிய உயரடுக்கு மேம்பாலம் அமைப்பது தொடர்பான, விரிவான திட்ட அறிக்கையை தயார்படுத்த 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகுமாம்.

சென்னை விமான நிலையம் - மீண்டும் நீரியியல் ஆய்வு

சென்னை விமான நிலையத்தில் புதிய ஐந்தாவது விமான நிலையம் மற்று உயரடுக்கு மேம்பாலம் அமைப்பது குறித்த, சாத்தியக்கூறுகளை ஆராய நீரியியல் ஆய்வு அறிக்கை தயார்படுத்தப்பட உள்ளதாம். விமான நிலையத்தின் பயணிகளை கையாளும் திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய முனையத்தை அமைப்பதோடு, அதற்கான அணுகலை எளிதாக்கும் வகையிலான திட்டங்களை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அண்மையில் முன்மொழிந்த நிலையில், புதிய ஆய்வு நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.

விமான நிலைய உயரடுக்கு மேம்பாலம்..!

முன்மொழியப்பட்டுள்ள ஐந்தாவது முனையத்திற்கான நிலம் தொலைதூரப்பகுதியில் இருப்பதால், அதற்கான அணுகலோடு, வாகனங்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வகையில் உயரடுக்கு மேம்பாலம் அமைக்க வேண்டிய தேவை உள்ளது. இதுதொடர்பாக அண்மையில் விமான நிலைய நிர்வாக ஆணையம், தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் மற்றும் சில முக்கிய பங்குதாரர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் உயர்மட்ட வழித்தடத்தை ஒருங்கிணைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ஆணையம் ஒரு தற்காலிகப் பாதையைத் திட்டமிட்டிருந்த நிலையில், ஐந்தாவது முனையத்தை தேசிய நெடுஞ்சாலை 32-உடன் (மாதா பொறியியல் கல்லூரிக்கு அருகில்) இணைக்கும் துல்லியமான பாதையை மாநில நெடுஞ்சாலைத் துறை முன்மொழிந்துள்ளது.

ஆய்வில் இறங்கும் அண்ணா பல்கலை.,

விமான நிலையத்திற்கான ஐந்தாவது முனையம் பரிந்துரைக்கப்பட்ட ஆரம்ப காலத்திலேயே நீரியியல் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, வழித்தடங்களில் புதிய தூண்களை அமைப்பதால் அடையாறு ஆற்றில் நீரோட்டம் பாதிக்கப்படுமா? என ஆய்வு செய்யப்பட்டது. அதன் முடிவில் புதிய கட்டுமான பணியால் ஆற்றின் நீரோட்டம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என கண்டறியப்பட்டது. ஆனால், தற்போது புதிய உயரடுக்கு மேம்பால திட்டமும் ஐந்தாவது முனைய பணிகளுடன் இணைக்கப்பட உள்ளதால், அண்ணா பல்கலைக்கழகம் புதியதாக விரிவான நீரியியல் ஆய்வினை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

8 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை..!

வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஐந்தாவது முனைய பணிகளை தொடங்குவதற்கு முன்பாக, விமான நிலைய நிர்வாக ஆணையம் நீர்வளத்துறையிடமிருந்து மற்றொரு அனுமதியையும் பெற வேண்டியுள்ளது. மாநில அரசு மற்றும் விமான நிலைய நிர்வாகத்திற்கு இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஓரிரு தினங்களில் நடைபெற உள்ளது. அதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு புதிய முனையம் மற்றும் உயரடுக்கு மேம்பாலத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ஆலோசகர் நியமிக்கப்பட உள்ளாராம். அதன்பிறகு, இந்த திட்டத்திற்கான விரிவான அறிக்கை 6 முதல் 8 மாதங்களில் தயாராகும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?

சென்னைக்கான தேவை..!

சென்னைக்கான இரண்டாவது விமான நிலையமாக திட்டமிடப்பட்ட பரந்தூரை, விஜய் தலைமையிலான அரசு ரத்து செய்தது. அதேநேரம், புதிய இடத்தை தேர்வு செய்து அடுத்த கட்ட பணிகளை தொடங்குவதற்குள், ஏற்கனவே உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிபடுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சர்வதேச தரத்தில், அதிகப்படியான பயணிகளை கையாளும் திறன் கொண்ட ஒரு விமான நிலையத்திற்கான தேவை அதிகரித்துள்ளதால், ஐந்தாவது முனையத்திற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks