மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கு இடையே மோதல் நீடித்து வந்த நிலையில் இன்றளவும் அதன் பதற்றம் ஓய்ந்தபாடில்லை. இதன் தாக்கம் சுற்றுலா, வணிகம், முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து என அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் - ட்ரம்ப்

மத்திய கிழக்கில் அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குவதற்கு ஈடாக, ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாக முன்மொழியப்பட்ட ஒரு திட்டத்தை ஈரான் அரசு நிராகரித்ததாகக் கூறப்படும் நிலையில், இதற்கு எதிர்வினையாக ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என சமீபத்தில் அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாகவே அறிவித்தார்.

அமைதிக்கான ஒப்பந்தம் - ட்ரம்ப் சூசக பதில்

இதன்பின்னர் புளோரிடாவில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்பிடம், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு, தாக்குதல் நடத்தப்படலாம் அல்லது அமைதிக்கான ஒப்பந்தமும் ஏற்படலாம் என சூசகமாக பதிலளித்தார். தொடர்ந்து பேசிய ட்ரம்ப், கடுமையான சேதத்தை சந்தித்த போதிலும் ஈரான் அரசு அமைதியை விரும்ப மறுப்பதாகவும் ராணுவபலம், பொருளாதாரம், நட்பு நாடுகள் என அனைத்தையும் இழந்தபிறகு அவர்களிடம் எஞ்சியிருப்பது வரலாறு காணாத பணவீக்கம் மட்டுமே எனவும் கடுமையாக சாடினார். ஈரானை விமர்சித்த போதி அமைதி ஒப்பந்தம் குறித்த ட்ரம்பின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article