கண்ணீர் விடும் விவசாயிகள் பாலாற்றில் பொங்கி வழியும் ஆபத்தான நுரை - அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?

கண்ணீர் விடும் விவசாயிகள் பாலாற்றில் பொங்கி வழியும் ஆபத்தான நுரை - அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?
News Image

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பாலாற்றில் மீண்டும் பொங்கி வழியும் நச்சு இரசாயன நுரையால் மக்களும், விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர். தொடர் மழையைப் பயன்படுத்தி ஆலைகள் அட்டூழியம் செய்வதை அதிகாரிகந்ள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர் கனமழை பெய்து வரும்நிலையில், இந்த மழையைப் பயன்படுத்தி வாணியம்பாடியில் செயல்படும் சில தோல் தொழிற்சாலைகள் தங்களின் சுத்திகரிக்கப்படாத நச்சு இரசாயனக் கழிவுநீரை பாலாற்றில் நேரடியாகத் திறந்துவிட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக, ஆம்பூர் அடுத்த  மாராப்பட்டு பாலாற்றுத் தரைப்பாலத்தில், ஆற்று நீரே கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு வெள்ளை நிற இரசாயன நுரை பல அடி உயரத்திற்கு மலை போல் பொங்கி வழிகிறது. பாலத்தின் அடியில் இருந்து கொட்டும் தண்ணீர் முழுவதும் வெள்ளைப் பஞ்சுப் பொதிகள் போலவும், பனிப்பாறைகள் போலவும் குவிந்து கிடப்பது அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தரைப்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சத்துடன் நின்று இந்த அவலத்தைப் பார்த்துச் செல்கின்றனர். மேலும், காற்றில் பறக்கும் நச்சு நுரையின் துகள்களால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் மற்றும் தோல் ஒவ்வாமை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும், இந்த இரசாயன நச்சு நீர் ஆற்றுப்படுகை வழியே சென்று நிலத்தடி நீரில் கலப்பதால், விவசாயக் கிணறுகள் மற்றும் குடிநீர் ஆழ்துளைக் கிணறுகள் பாழாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரங்களில் அதிகாரிகளின் கண்காணிப்பு குறைவாக இருப்பதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தொழிற்சாலைகள் கழிவுநீரை ஆற்றில் கலப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதனால் பாலாற்றின் சுற்றுச்சூழல் முற்றிலும் சீரழிந்து வருகிறது.

எனவே, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகக் ஆய்வு செய்து, பாலாற்றில் இரசாயனக் கழிவுகளை வெளியேற்றிய தொழிற்சாலைகளைக் கண்டறிந்து சீல் வைக்க வேண்டும் எனவும், அவர்கள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாலாற்றுப் பாசன விவசாயிகளும் பொதுமக்களும் ஆவேசத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks