அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும்! “மறப்போம், மன்னிப்போம்” – சி.வி.சண்முகம் பேட்டி

அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும்! “மறப்போம், மன்னிப்போம்” – சி.வி.சண்முகம் பேட்டி
News Image

விழுப்புரம்: அதிமுக வலிமைபெற மறப்போம் மன்னிப்போம் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; 24 மணி நேரத்தில் 120 கிளைச் செயலாளர்கள் நீக்கம் வேதனை; எனக்கு பதவி தேவையில்லை என மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணபதிபட்டு கிராமத்தில், அதிமுகவின் 55-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த 5 முதியவர்களுக்கு காது கேட்கும் கருவி, 2 நபர்களுக்கு தையல் மெஷின், 2 நபர்களுக்கு சலவைப் பெட்டி, 4 அணி வீரர்களுக்கு வாலிபால் கிட் மற்றும் கிரிக்கெட் கிட் ஆகியவற்றை வழங்கினார்.

அதற்கு முன்னதாக அதிமுகவின் 55-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம்..

கேள்வி: அதிமுக 55-வது தொடக்க விழா கொண்டாடியிருக்கிறது. இந்த சரிவிலிருந்து மீள்வதற்கு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்:

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, மாண்புமிகு அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இந்த மாபெரும் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 55-வது ஆண்டு தொடக்க விழாவை கண்டிருக்கிறது. இந்தியாவிலேயே 31 ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஒரே கட்சி அதிமுக தான்.

இந்த 55-வது தொடக்க விழாவில் அனைத்து தொண்டர்களின் எதிர்பார்ப்பும், தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும், அதிமுக வலிமை பெற வேண்டும், புத்துயிர் பெற வேண்டும், மீண்டும் எம்.ஜி.ஆர்., அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் என்பதுதான்.

இந்த இயக்கத்தை மீண்டும் வலிமை பெறச் செய்ய, பிரிந்தவர்கள், சென்றவர்கள், நீக்கி வைக்கப்பட்டவர்கள், ஒதுங்கி இருப்பவர்கள் என அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். "மறப்போம், மன்னிப்போம்" என்ற எண்ணத்துடன், கடந்ததை பற்றி நினைக்காமல், தவறுகள் இரு பக்கமும் இருக்கலாம் என்பதை உணர்ந்து, அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும்.

எங்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்த இந்த இயக்கம், அம்மா சொன்னது போல நூறாண்டு காலம் நிலைத்து நிற்க வேண்டும். இதற்கு ஒரு சிறு துரும்பைக் கூட விடக்கூடாது, அனைவரையும் இணைத்து செயல்பட வேண்டும். தொண்டர்கள் மத்தியில் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை உருவாக்கினால் தான், மக்களுக்கும் நம் மீது நம்பிக்கை வரும்.

ஆதரவாளர்கள் நீக்கம் குறித்த கேள்விக்கு...

நான் யார் மீதும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் தோல்வி குறித்து எதையும் பேச விரும்பவில்லை. நடந்தது நடந்து முடிந்ததாக இருக்கட்டும். இந்த இயக்கம் வலிமை பெற எனது முழு ஒத்துழைப்பை தருகிறேன் என்று தான் சொன்னேன். எனக்கு பதவி கொடுங்கள் என்று எதையும் நான் கேட்கவில்லை.

ஆனால், நான் சொன்ன 24 மணி நேரத்தில் எனது தொகுதியில் உள்ள கிட்டத்தட்ட 120-க்கும் மேற்பட்ட கிளைக் கழக செயலாளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். கிளைச் செயலாளர் என்ன செய்வார்? யார் இருந்தாலும் அவர் உழைக்கப் போகிறார். நிர்வாகிகள் நீக்கம் போதாது என்று இப்போது தொண்டர்களை நீக்கும் கட்டாயத்திற்கு வந்திருப்பது மனவருத்தமாக, வேதனையாக இருக்கிறது.

எனக்கு எல்லா பதவியும் அம்மா கொடுத்து விட்டார். 25 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என அனைத்து பதவிகளையும் பார்த்து விட்டேன். எனக்கு எதுவும் தேவையில்லை. அதிமுக ஒற்றுமையாக, வலிமையாக இருந்தால் போதும் என்பது தான் எனது நோக்கம்.

ஆளுங்கட்சி அதிமுகவை பலவீனப்படுத்துகிறதே என்ற கேள்விக்கு...

நீங்கள் ஏன் இடம் கொடுக்கிறீர்கள்? நீங்கள் இடம் கொடுத்தால் தான் அவர்கள் வருவார்கள். தவறு நம்மிடம் இருக்கிறது. நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொண்டு ஒற்றுமையாக இருந்தால் யாரும் உள்ளே வர முடியாது. தவறுகளை நம்மிடம் வைத்துக் கொண்டு இன்னொருவர் மீது குறை சொல்வதில் அர்த்தமில்லை.

எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இருக்கிறது, பல விஷயங்களை பேசலாம். ஆனால் நான் சர்ச்சையை வளர்க்க விரும்பவில்லை. இதை ஒரு நல்ல முடிவுக்கு கொண்டு வந்து இந்த இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்பது தான் எனது ஒரே எண்ணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks