தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் தசரா திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திரள்வர். இதேபோல் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்களாக நடைபெற்ற நிகழ்வில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த அம்மனை தெய்வ வேடங்களை அணிந்து வந்தவாறு பக்தர்கள் வழிபட்டனர்.

சிம்மவாகனத்தில் செவ்வாடையில் எழுந்தருளிய அம்மன்

இந்நிலையில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான, சூரசம்ஹாரத்திற்காக சிவப்பு பட்டுடுத்தி 10 கைகளிலும் ஆயுதங்களுடன் சிம்ம வாகனத்தில் முத்தாரம்மன் எழுந்தருளினார். ஆலயத்திலிருந்து கடற்கரையை வந்தடைந்த அம்மனை கண்டு ஆர்ப்பரித்த திரளான பக்தர்கள், பக்தி முழக்கங்களை எழுப்பினர்.

சூரனை சம்ஹாரம் செய்த முத்தாரம்மன்

முதலில் மனித தலையுடன் வந்த மகிஷாசூரனையும், அதைத் தொடர்ந்து 2-வதாக சிங்க முகத்துடன் வந்த மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்தார். தொடர்ந்து மூன்றாவதாக எருது முகத்துடன் வந்து, அம்மனை சுற்றி வந்து போரிட்ட மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன், நான்காவதாக சேவல் உருவில் வந்த மகிஷாசூரனை சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்து மகிஷாசூர மர்த்தினியாக அருள்பாலித்தார்.

Source: Read Full Article