புதுச்சேரி நீர்நிலைகளில் அமெரிக்க மீன்! நாட்டு மீன்களுக்கு காத்திருக்கும் பேராபத்து

புதுச்சேரி நீர்நிலைகளில் அமெரிக்க மீன்! நாட்டு மீன்களுக்கு காத்திருக்கும் பேராபத்து
News Image

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலங்களில் வெளிநாட்டு வகையான சக்கர் மவுத் கெளுத்தி மீன்கள் காணப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மீன்களின் இனப்பெருக்கத்தைப் பாதிப்பதுடன், நீர்நிலைகளின் இயற்கையான சூழலியலுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய இந்த மீன்களின் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரி அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில், ஏரி, குளம், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வாழும் மீன் இனங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின்போது, பாரம்பரிய நாட்டு மீன்களுடன், உள்நாட்டு நீர்நிலைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெளிநாட்டு மீன் இனமான சக்கர் மவுத் கெளுத்தி மீன்களும் காணப்படுவது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பல்லுயிர் பெருக்க மையத்தின் நிறுவனர் மற்றும் இயற்கை ஆர்வலர் பூபேஷ் குப்தா கூறியதாவது:

தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட மீன் சக்கர் மவுத் கெளுத்தி மீன்கள் தென் அமெரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டவை. இவற்றின் உடலில் கவசம் போன்ற எலும்புத் தகடுகள் காணப்படும். மேலும், இவை வரிக்குதிரையை நினைவூட்டும் வகையில் உடலில் கோடுகள் அல்லது புள்ளிகளைக் கொண்ட தோற்றத்தில் காணப்படுகின்றன.

இந்த வகை மீன்கள், மீன் தொட்டிகளில் படியும் பாசிகள் (Algae) மற்றும் அடிப்பகுதியில் தேங்கும் உணவுப் பொருட்களை உட்கொள்கின்றன. இதனால், அலங்கார மீன் தொட்டிகளில் பாசிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இவை வளர்க்கப்படுகின்றன.

ஆனால், இவை வளர்ந்து பெரிதாகும்போது அல்லது அவற்றைப் பராமரிப்பதில் சிரமம் ஏற்படும்போது, சிலர் அவற்றை அருகிலுள்ள ஏரி, குளம், குட்டைகள் போன்ற பொது நீர்நிலைகளில் விட்டுவிடுகின்றனர். மீன் வளர்ப்பு நிலையங்களில் இருந்து தப்பித்தல், நீர்நிலைகளை இணைக்கும் நீர்வழிகள் வழியாகப் பரவுதல் போன்ற காரணங்களாலும் இவை இயற்கையான நீர்நிலைகளைச் சென்றடைகின்றன.

இவ்வாறு வெளிநாட்டு மீன் இனங்கள் இயற்கை நீர்நிலைகளில் பரவுவது, அங்கு ஏற்கெனவே வாழ்ந்து வரும் பாரம்பரிய நாட்டு மீன்களுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.

நாட்டு மீன்களின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல்

சக்கர் மவுத் கெளுத்தி மீன்கள் அதிக எண்ணிக்கையில் பெருகும்போது, நீர்நிலைகளில் உள்ள உணவுவளங்கள் மற்றும் வாழ்விடங்களுக்காக நாட்டு மீன்களுடன் போட்டியிடக்கூடும். குறிப்பாக, பாசிகள் உள்ளிட்ட உணவுவளங்களை அதிக அளவில் உட்கொள்வதால் நீர்நிலைகளின் இயற்கையான உணவுச் சங்கிலியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், இந்த மீன்கள் நாட்டு மீன்களின் முட்டைகள் உள்ளிட்டவற்றை உட்கொள்வதாகக் கூறப்படுகிறது. இதனால் உள்நாட்டு மீன் இனங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு, அவற்றின் எண்ணிக்கை குறையும் அபாயம் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

நீர்நிலைகளில் வாழும் சிறிய மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் பல்வேறு பறவைகளுக்கு உணவாக உள்ளன. இத்தகைய உணவுவளங்கள் பாதிக்கப்படும்போது, அவற்றைச் சார்ந்து வாழும் பறவைகளின் உணவுச் சங்கிலியும் பாதிக்கப்படலாம். இதன் தொடர்ச்சியாக, நீர்நிலைகளைச் சார்ந்த பறவைகளின் வாழ்விடச் சூழல் மற்றும் வலசைப் போக்கிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், சக்கர் மவுத் கெளுத்தி மீன்களின் பரவலை ஒரு மீன் இனத்தின் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், ஒட்டுமொத்த நீர்நிலைச் சூழலியலுடன் தொடர்புடைய பிரச்சினையாகக் கருத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

2 அடி வரை வளரும் தன்மை

சக்கர் மவுத் கெளுத்தி மீன்கள் சுமார் 2 அடி வரை வளரக்கூடியவை. இவற்றின் உடலில் உள்ள கடினமான எலும்புத் தகடுகள் பாதுகாப்பு அம்சமாக விளங்குகின்றன. இவை பல்வேறு நீர்நிலைச் சூழல்களுக்கு ஏற்ப வாழும் தன்மை கொண்டிருப்பதால், சில பகுதிகளில் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கக்கூடும்.

இந்த மீன்களை நன்னீரில் வாழும் பிற உயிரினங்கள் எளிதில் உணவாக உட்கொள்வதில்லை என்றும், மனிதர்களும் பொதுவாக உணவுக்காகப் பயன்படுத்துவதில்லை என்றும் பூபேஷ் குப்தா தெரிவித்துள்ளார். இயற்கையான வேட்டையாடும் உயிரினங்களால் இவற்றின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவது குறைந்தால், நீர்நிலைகளில் இவற்றின் ஆதிக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பான இடங்களில் முட்டையிட்டு இனப்பெருக்கம்

இந்த மீன்கள் ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளின் கரையோரங்களில் குழிகளை உருவாக்கி, பாதுகாப்பான இடங்களில் முட்டையிடும் தன்மை கொண்டவை. முட்டைகள் மற்றும் குஞ்சுகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளால் அவற்றின் இனப்பெருக்க வெற்றி அதிகரிக்கக்கூடும்.

ஒரு பெண் சக்கர் மவுத் கெளுத்தி மீன் ஆண்டுக்கு சுமார் 30,000 முட்டைகள் இடக்கூடும் என பூபேஷ் குப்தா தெரிவித்துள்ளார். இருப்பினும், முட்டைகளின் எண்ணிக்கை மீனின் இனம், வயது மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப மாறுபடலாம்.

அதிக அளவில் இனப்பெருக்கம் செய்வதுடன், பல்வேறு நீர்நிலைகளில் உயிர்வாழும் திறனும் இணைவதால், இந்த மீன்கள் வேகமாகப் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. இவற்றின் எண்ணிக்கை அதிகரித்தால், நாட்டு மீன்களின் உணவுவளம், வாழ்விடங்கள் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவை பாதிக்கப்படலாம்.

புதுச்சேரி நீர்நிலைகளில் கண்டறியப்பட்டதால் கவலை

புதுச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நீர்நிலை ஆய்வுகளின்போது சக்கர் மவுத் கெளுத்தி மீன்கள் காணப்பட்டுள்ளன. இதனால், ஏற்கெனவே உள்ளூர் மீன் இனங்களைக் கொண்ட நீர்நிலைகளில் வெளிநாட்டு மீன் இனங்களின் பரவலைக் கண்காணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

நாட்டு மீன்கள் நீர்நிலைகளின் இயற்கையான சமநிலையைப் பராமரிப்பதிலும், உணவுச் சங்கிலியை நிலைநிறுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை குறைந்தால், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலும் பாதிப்புகள் ஏற்படலாம்.

எனவே, புதுச்சேரியில் உள்ள ஏரிகள், குளங்கள், ஆறுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் இந்த மீன்களின் பரவல் எந்த அளவில் உள்ளது என்பதைக் கண்டறிந்து, அவற்றின் தாக்கத்தை அறிவியல் அடிப்படையில் மதிப்பிடுவது அவசியமாகிறது.

அலங்கார மீன் விற்பனைக்குத் தடை விதிக்க கோரிக்கை

சக்கர் மவுத் கெளுத்தி மீன்களின் பரவலைத் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர் பூபேஷ் குப்தா வலியுறுத்தியுள்ளார்.

மீன் தொட்டிகளில் வளர்க்கப்படும் இந்த மீன்கள் பெரிதாகிவிட்டாலோ அல்லது அவற்றைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ, அவற்றை அருகிலுள்ள ஏரி, குளம், குட்டைகள் போன்ற இயற்கை நீர்நிலைகளில் விடக்கூடாது. அதற்குப் பதிலாக, உரிய வழிகாட்டுதலின்படி மீன் வளர்ப்பு நிலையங்கள் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுக வேண்டும்.

மேலும், சக்கர் மவுத் கெளுத்தி மீன்கள் போன்ற வெளிநாட்டு மீன் இனங்கள் இயற்கை நீர்நிலைகளில் பரவுவதைத் தடுக்கும் வகையில், அலங்கார மீன் விற்பனையகங்களில் இவற்றின் விற்பனைக்குத் தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டு மீன் இனங்களைப் பாதுகாப்பது, நீர்நிலைகளின் பல்லுயிர் பெருக்கத்தைப் பராமரிப்பது மற்றும் இயற்கையான உணவுச் சங்கிலியைப் பாதுகாப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சக்கர் மவுத் கெளுத்தி மீன்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks