திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு சிறப்பு கராத்தே தேர்வு (பெல்ட் வழங்கும் விழா) நடைபெற்றது.

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் ஐ.எஸ்.ஆர். ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி (I.S.R. Sports Martial Art's Academy) செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்றுவிக்கபடுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தற்காப்பு கலையின் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்குகின்றனர். இந்நிலையில் இன்று மாணவ-மாணவிகளின் தற்காப்புக் கலைத் திறனை ஊக்குவிக்கும் மற்றும் பாராட்டு விழாவானது மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்த அகாடமியில் முறையான மற்றும் கடினமான பயிற்சி பெற்று வந்த திருவாரூர், சேந்தமங்கலம், வாழ்க்கை, மணக்கால், திருமருகல், நன்னிலம் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களது விடாமுயற்சியால் பல்வேறு கட்ட கிரேடிங் தேர்வுகளில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலும், அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்தப்பட்டதை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த பிரம்மாண்டமான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்களின் சிறப்பான பங்களிப்புடன் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அரங்கேறியது.

சிறப்பு விருந்தினர்கள் வருகை

விழாவிற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் பா. ராஜீவ் காந்தி தலைமை தாங்கி விழாவினைச் சிறப்பித்தார். அகாடமியின் செயலாளரும், கியோஷி எஸ். இராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

சிறப்பு விருந்தினரின் பங்கேற்பும் பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வும்

இந்த விழாவின் தலைமை தாங்கி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் பா. ராஜீவ் காந்தி மாணவ-மாணவிகளுக்கு கராத்தே பெல்ட்டுகள் மற்றும் தகுதிக்கான சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். அவர் தனது சிறப்பு உரையில், இன்றைய காலகட்டத்தில் மாணவ-மாணவிகள் கல்வி கற்பதோடு மட்டுமின்றி, அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகள் தற்காப்புக் கலைகளையும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஐ.எஸ்.ஆர். அகாடமி போன்ற நிறுவனங்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் நல்லொழுக்கங்களையும், அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர ஆற்றிவரும் சேவைகள் பாராட்டுக்குரியவை என்றும் தெரிவித்தார். சிறப்பு விருந்தினரிடமிருந்து பெல்ட்டுகளையும், பதக்கங்களையும் பெற்ற மாணவ-மாணவிகளின் முகங்களில் மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்கின.

தற்காப்பு கலைகளின் முக்கியத்துவம்; சிறப்பு விருந்தினர்கள் பெருமிதம்

இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பல்வேறு சிறப்பு அழைப்பாளர்களும், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்திச் சிறப்பித்தனர். திருமருகல் வள்ளலார் குருகுலம் மழலையர் பள்ளியின் தலைமை ஆசிரியர் S. விஜயலெட்சுமி சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

கராத்தே பயிற்சியானது மாணவர்களுக்கு உடல் உறுதியையும், மன உறுதியையும், தீர்ப்புகளையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையையும் அளிக்கிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் அமைந்த இந்த விழாவிற்கு, ஏராளமான மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்து சிறப்பித்தனர். ஐ.எஸ்.ஆர். ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த விழா தற்போதைய சூழலில் பள்ளி மாணவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்களுக்கு தற்காப்பு கலையின் அவசியத்தை உணர்த்தும் விதமாக அமைந்திருந்தது.

Source: Read Full Article