"சட்டம் ஒழுங்கை கெடுத்தது திமுக" சில மாதங்களில் சீரமைப்போம் என - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !

"சட்டம் ஒழுங்கை கெடுத்தது திமுக" சில மாதங்களில் சீரமைப்போம் என - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
News Image

கடந்த ஐந்து ஆண்டுகள் சீர்கேடு செய்யப்பட்ட சட்டம் ஒழுங்கை சரி செய்ய சில மாதங்கள் ஆகும், அதை செய்வதற்கான முயற்சிகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகிறது., - தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

புதிய பேருந்து நிலையம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் சுமார் 8.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை எரிசக்தித்துறை அமைச்சர் நிர்மல்குமார், எம்எல்ஏ-க்கள் தங்கப்பாண்டி, விஜய், கருப்பையா உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி திறந்த வைத்தனர்.,

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார்.,

செக்காணூரணி மதுரை மாவட்டத்தின் முக்கியமான பகுதி, நூற்றுக்கணக்கான கிராமங்களை இணைக்கும் இந்த செக்காணூரணி, உசிலம்பட்டி பேருந்து நிலையம், இதில் செக்காணூரணி பேருந்து நிலையம் முடிவடைந்து இன்று திறக்கப்பட்டுள்ளது, இந்த பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். உசிலம்பட்டி பேருந்து நிலைய பணிகளும் 5 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது அதை விரைவு படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளோம். பருவமழை குறித்து கடந்த வாரமே தேனி மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, இதே போன்று மதுரை மாவட்டத்திலும் ஆய்வு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் செய்யப்பட்டு வருகிறது, அதுவும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முடிவடைந்து விடும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்., எல்லா இடங்களிலும் ஒரு தவறு நடக்கிறதா உடனே செல்லுங்கள் என சொல்லியுள்ளார். வேங்கை வயலில் ஒரு தீர்வு கிடைக்காமல் எத்தனை நாள் சிபிசிஐடி-க்கு மாற்றினார் அந்த மாதிரி இன்று  இல்லை., எந்த எந்த இடங்களில் தவறு நடக்கிறதோ யார் தவறு செய்திருந்தாலும் உடனே நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டுள்ளார்.

முயற்சிகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகிறது.

இன்று கூட செஞ்சியில் காணாமல் போன குழந்தையை 7க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு எல்லா இடங்களிலும் தேடி வருகின்றனர்., கண்டிப்பாக எல்லா வகையிலும் விசாரணை செய்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கை ஐந்து ஆண்டுகளுக்கு கெடுத்து வைத்திருந்தார்கள் திமுகவினர், அதை சரிசெய்ய போதை பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க கடுமையான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது., ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றாக சரி செய்யப்படும், ஐந்து ஆண்டுகள் சீர்கேடு செய்யப்பட்டதை சரி செய்ய சில மாதங்கள் ஆகும், அதை செய்வதற்கான முயற்சிகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகிறது.

ரேசன் அரிசி தரமற்றது

ரேசன் அரிசி தரமற்றது என விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்ட தான் இருப்பார்கள், ஆனால் மக்களுக்கு எந்த மாதிரியான தீர்வு கொடுக்க முடியும் என்பதற்கு, இன்று விலை வாசி ஏறியுள்ளது அதனால் வேறு இடத்திலிருந்து சன்ன ரக அரிசிகளை வாங்கி வந்து ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க முடியும் என்பதை அந்த துறை மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது. விமர்சனங்கள் செய்பவர்கள் எல்லாத்தையும் விமர்சனம் செய்து கொண்டு தான் இருப்பார்கள், அதற்காக செவி சாய்காமல் மக்கள் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்., தேவர் ஜெயந்திக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது, இந்த ஆண்டு 20 ஆண்டுகளாக வைக்கப்பட்ட கோரிக்கையின் படி கூடுதலாக ஒரு பாதை இல்லாத நிலை இருந்தது, வெளியேற முடியாத நிலை நமது அரசு வந்த பின் கூடுதலாக ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 5 மணி நேரம் காத்திருந்து செல்வது குறைக்கப்படும். கடந்த ஒரு வார காலத்தில் பருவ மழையை கருத்தில் கொண்டு கூடுதலாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு மின் தடை, மின் வயர்கள் அறுந்து விழுவது சரி செய்ய துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது., என பேட்டியளித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks