எங்களைப் போன்ற ஏழைகள்தான் அமைச்சர்களாக இருக்கிறோம் - டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் வன்னியரசு பதிலடி!

எங்களைப் போன்ற ஏழைகள்தான் அமைச்சர்களாக இருக்கிறோம் - டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் வன்னியரசு பதிலடி!
News Image

விழுப்புரம் :  தற்போதைய அரசு வசதி படைத்தவர்களுக்கான அரசு என்ற டி.ஆர்.பி. ராஜாவின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, “எங்களைப் போன்ற ஏழைகள்தான் இன்று அமைச்சர்களாக இருக்கிறோம்” என்று வன்னியரசு பதிலளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ள உழவர் சந்தையை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆய்வு மேற்கொண்டார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது வன்னி அரசு கூறியதாவது:

திண்டிவனம் தொகுதி உட்பட பல்வேறு இடங்களில் மக்களின் தேவைகள், கோரிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. நேற்று உழவர் சந்தையில் சாக்கடை தண்ணீர் ஏறியது குறித்து ஊடகங்களில் வந்த செய்தியை ஒட்டி இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி நேரில் பார்வையிட்டோம்.

உழவர் சந்தையில் சாக்கடை நீர் தேங்குவதை தடுக்க தண்ணீர் செல்லும் பாதைக்கு உடனடியாக ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்புறம் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெறுகிறது. உழவர் சந்தையை நவீனப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கூடுதல் கடைகளுக்கு இடம் உள்ளது, அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வரும். கூடுதல் கடைகள், நவீன கழிவறைகள், சாலைகள் விரைவில் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மரக்காணம் பகுதியில் ஐந்து வீடுகள் சேதமடைந்ததாக தகவல் வந்துள்ளது. மாலையில் நேரில் சந்திக்க உள்ளோம். சிறிய பாதிப்பு என்றாலும் உடனடியாக பார்வையிட்டு தீர்வு காணப்படும்.

*மழை முன்னெச்சரிக்கை:* மரக்காணம் பகுதியில் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும் என முன்பே கண்டறிந்து அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, பதற்றம் தேவையில்லை.

செஞ்சி சிறுமி மாயம் குறித்த கேள்விக்கு:

மாவட்ட ஆட்சியர், எஸ்.பி-யிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை தர தயாராக இருக்கிறது தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தாயின் கண்ணீரை உணர்ந்து தேடுதல் வேட்டை தீவிரமாக நடக்கிறது.

*கோவை பள்ளி மாணவன் தற்கொலை / சாதிய வன்கொடுமை குறித்த கேள்விக்கு:* இது ஏற்றுக்கொள்ள முடியாதது. தலைவர் திருமாவளவன் அறிக்கை கொடுத்துள்ளார். பொறுப்பு அமைச்சர், கமிஷனர், ஏடிஜிபி மற்றும் போராட்டக்காரர்களுடன் பேசி வருகிறோம். விரைவில் தீர்வு வரும். பள்ளிகளில் சாதிய பாகுபாட்டை ஒழிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். கயிறு கட்டுவது போன்ற அடையாளங்களை தவிர்க்கவும், உடற்பயிற்சி பீரியடை அதிகரிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.

சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விக்கு:

கோவை சம்பவம் தொடர்பாக தலைவர் அறிக்கை கொடுத்துள்ளார். 3 நாட்களாக விடுதலைச் சிறுத்தைகள் போராட்டக் களத்தில் நிற்கிறோம். வெறும் அறிக்கை அல்ல, மக்களோடு நிற்கும் இயக்கம். நாங்குநேரி சம்பவம் போல் இதையும் தீர்க்க முன்னெடுப்பு எடுத்துள்ளோம். கவின் படுகொலையில் எங்கள் வலியுறுத்தலின் பேரில் தான் கைது நடந்தது. அரசு சட்டப்படி சரி செய்து வருகிறது.

சீமான் குறித்த கேள்விக்கு: 'பார்ப்பன கடப்பாரை கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன்', 'திருட்டு திமுக' என சீமான் பேசியபோது, கலைஞரை இழிவாக பேசியபோது, பேனாவை உடைப்பேன் என்றபோது திமுகவினர் கண்டிக்கவில்லை. இப்போது மலிவான அரசியல் செய்கின்றனர். ஆரிய திராவிட யுத்தத்தில் ஆரிய கோட்பாட்டை உள்வாங்கிய சீமானை ஆதரிப்பது எந்த விதத்தில் சரி என்பதே எங்கள் கேள்வி. அதற்கு பதில் சொல்லாமல் எங்களை திட்டுவது தான் திமுக நிலைப்பாடா என மக்கள் மன்றத்தில் கேட்கிறேன்.

போதைப்பொருள் குறித்த கேள்விக்கு: போதையில்லா தமிழகம் என்பதே முக்கியம். யார் செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறைப்படுத்தப்படுகிறது. தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் அரசியல் குறித்த கேள்விக்கு

இது ஜனநாயக நாடு. யாரும் கட்சி தொடங்கலாம், மக்களை சந்திக்கலாம். மக்கள்தான் முடிவு செய்வார்கள். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் கட்டமைத்த மதச்சார்பற்ற மாநிலம். இங்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சிறுபான்மையினருக்கு எதிராக குறி வைத்தால் நடக்காது. மதச்சார்பின்மையும், சமூக நீதியும் இங்கு ஆழமாக வேரூன்றியுள்ளது. அதை யாராலும் அசைக்க முடியாது.

தற்போதைய அரசு வசதி படைத்தவர்களுக்கான அரசுதான், ஏழைகளுக்கான அரசு இல்லன்னு டி.ஆர்.பி. ராஜா விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்...

டி.ஆர்.பி. ராஜா சொல்றதுதான் இதுல வந்து நகைச்சுவையா இருக்கு. எங்களைப் போன்ற ஏழை பாழைகள்தான் இன்னைக்கு அமைச்சரா இருக்கிறோம். அவரைப் போன்ற வசதி படைத்தவர்கள், மிட்டா மிராசுகள் இல்லை இன்னைக்கு. அதனால அவரு பேசுறது ஒரு நகைச்சுவையா இருக்கு, அவர் சொல்வது . இவ்வாறு அவர் கூறினார்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks