இந்தாண்டு 2026-ல் அமாவாசை திதி ஆரம்பம் நேற்று (9.10.2026) இரவு 09;36 மணி முதல், இன்று 10.10.2026 இரவு 09.20 மணி வரை திதி நேரமாக கருதப்படுகிறது.

மகாளய அமாவாசை 2026

மகாளய அமாவாசை, சர்வபித்ரி அமாவாசை, பித்ரா மோட்ச அமாவாசை அல்லது பித்ருக்கள் அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. அதாவது நமது முன்னோர்களுக்காக நாம் செய்யப்படும் இந்துக்களின் பாரம்பரிய சடங்குகளாகும். இந்த சடங்குகள் மூலம் நமது முன்னோர்களிடம் ஆசிர்வாதம் பெருவதற்கும் வீட்டில் நன்மை ஏற்படவும், செழிப்பான வாழ்க்கைக்கு அவர்களின் ஆசிகளை பெறுவதற்கும், மகாளய அமாவாசை தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் மிகவும் சிறப்பானதாக அமைகிறது. குறிப்பாக இந்திய நாட்டில் நதி, ஆறு, கடல், குளம் உள்ளிட்ட இடங்கள் புனிதமான இடமாக பார்க்கப்படுகிறது. இந்த நீர்நிரம்பிய இடங்களின் கரைகளில் இது போன்ற சடங்குகள் செய்வது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இந்த மகாளய நாளில் முன்னோர்களுக்கு செய்யப்படும் தர்ப்பணம் முக்கியம் வாய்ந்தது.

முன்னோர்களின் 15 நாட்கள்

முன்னோர்களின் 15 நாட்கள் எனப்படும் பக்ஷத்தின் கடைசி நாளில் இந்த சடங்கு முறை அனுசரிக்கப்படுகிறது. இந்த காலகட்டம் மிகவும் முக்கிய நாட்களாக அமைகிறது. மற்ற நாட்களை காட்டிலும் இந்த நாட்கள் கூடுதல் சிறப்பான நாட்களாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்த நாளில் திங்கள் கிழமை வருவது கூடுதல் சிறப்பும் என சொல்லப்படுகிறது. வங்காள பகுதியில் இது மகாளயா என்று அனுசரிக்கப்படுகிறது. அதாவது அவர்கள் இஷ்ட தெய்வமான துர்கை அம்மனின் பூஜை நாளாகும். ஒரு புனித திருவிழா போல கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் தேவி துர்கா பூமிக்கி அவதரித்தார் எனவும் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையான விரதத்தை மேற்கொண்டு மரியாதைக்கு உரிய நாளாக நினைத்து பக்தியுடன் முன்னோர்களை வேண்டி சடங்குகளை அனுசரிக்கின்றனர்.

முக்கியம் பெரும் தண்ணீர் மற்றும் எள்

முன்னோர்களுக்கு இந்த நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பான ஒன்று. ஒவ்வொரு நபர்களும் தங்களின் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி தேன், பால், பச்சரிசி வாழைப்பழம், எள் போன்ற பொருட்களைக் கொண்டு பிண்டம் செய்து வைத்து தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபடுகின்றனர். இதில் எள் மற்றும் தண்ணீர் கொண்டு வழிபடும் முறை முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனை நம் உள்ளங்கைகள் மூலமாக முன்னோர்களுக்கு அளிப்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். எள் மற்றும் தண்ணீர் சாதரணமாக கிடைக்கும் பொருட்கள் என்றாலும் முன்னோர்கள் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.

பித்ரு தோஷத்தை நீக்கும் வழி

ஜோதிட சாஸ்திரத்தில், முன்னோர்கள் ஏதோனும் தவறுதலாக நடந்திருந்தால், அந்த விடயம் பின்னால் வரும் நம்மை தொற்றிக் கொள்கிறது. அதாவது 'பித்ரு தோஷமாக' மாறிவிடுகிறது. இதனால் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம் என சொல்லப்படுகிறது. மேலும் முன்னோர்களின் ஆன்மாக்களும் அமைதியடையாமல், அமைதியை தேடி அலைகின்றன. இப்படியான கஷ்ட காலங்கள் நீங்க மகாளய அமாவாசையில் சிரார்த்த சடங்குகளை செய்வதன் மூலம் இந்த பித்ரு தோஷத்தை நீக்கும் வழியாகவும் அமைவதாக கூறப்படுகிறது. நாம் முன்னோர்களுக்கு இந்த நாளில் முக்கியதுவம் அளிப்பதை ஏற்றுக்கொள்ளும் அவர்கள், நமக்கு வளமான வாழ்க்கை அமைய ஆசிர்வதிப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த சடங்குகள் சாஸ்திரங்களில் மிகவும் புனிதமான ஒன்றாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டு 2026-ல் அமாவாசை திதி ஆரம்பம் நேற்று 9.10.2026 இரவு 09;36 முதல், இன்று 10.10.2026 இரவு 09.20 வரை திதி நேரமாக கருதப்படுகிறது. தமிழகத்தில் ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய புனித ஸ்தலத்தில் மக்கள் அதிகளவு குவிந்து தர்ப்பணம் செய்வது குறிப்பிடதக்கது.

Source: Read Full Article