சென்னையில் புதிதாகத் திறக்கப்பட்ட பூந்தமல்லி பைபாஸ்–வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் பயணித்த முதல்வர் விஜயின் தாய் ஷோபா, புதிய மெட்ரோவின் வசதிகள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். மெட்ரோ மிகவும் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும், குளுகுளுவென இருப்பதாக அவர் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லி வடபழனி மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான புதிய வழித்தடம் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்வுக்குப் பிறகு இருவரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். சுமார் ரூ.4,900 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம், சென்னையின் மேற்குப் பகுதிகளையும் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள மெட்ரோ வலையமைப்பையும் இணைக்கிறது.

விஜய் குடும்பத்தினர் வீடியோ

புதிதாக திறக்கப்பட்ட இந்த மெட்ரோ ரயிலில் பயணிக்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதே நேரம் முதல்வர் விஜய் குடும்பத்தினரும் மெட்ரோ ரயிலில் பயணித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்கள். இந்த வீடியோவில் விஜயின் அம்மா ஷோபா மெட்ரோ ரயில் பாதுகாப்பாகவும் , குளுகுளுவென்று இருப்பதாகவும் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்

CM Vijay’s Mother Enjoys a Metro Travel🚇❤️ https://t.co/4vLpqtIcVW

— TD....❥ (@MiniiGirl__) October 12, 2026

பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி பேருந்து நிலையம், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் பைபாஸ், போரூர் சந்திப்பு, வடபழனி என மொத்தம் 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் இடம்பெற்றுள்ளன. சுமார் 14.64 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடம், மேற்குச் சென்னையில் இருந்து நகரின் பிற பகுதிகளுக்குச் செல்வோருக்கு மெட்ரோ இணைப்பை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3.7 கிலோமீட்டர் நீளமுள்ள இரட்டை அடுக்கு கட்டமைப்பும் இடம்பெற்றுள்ளது.

அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த வழித்தடத்தில் அன்றைய தினம் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பயணிகள் சேவை இயக்கப்பட்டது. அக்டோபர் 12 முதல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. வார நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்ப உச்ச நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், புதிய மெட்ரோ ரயிலில் பயணித்த விஜயின் தாய் ஷோபா அதன் சுத்தம், பாதுகாப்பு மற்றும் குளிரூட்டப்பட்ட வசதிகளைப் பாராட்டியிருப்பது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Source: Read Full Article