"எம்.எல்.ஏ கேட்டதும் தர்றீங்க" செவிலியர்களுக்கு ஏன் இல்ல ? போராட்டத்தில் இறங்கிய நடிகை கஸ்தூரி

"எம்.எல்.ஏ கேட்டதும் தர்றீங்க" செவிலியர்களுக்கு ஏன் இல்ல ? போராட்டத்தில் இறங்கிய நடிகை கஸ்தூரி
News Image

"செவிலியர்கள் போராட்டம்"

தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கம் சார்பில் 1000 - க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தம் , பணி பாதுகாப்பு , சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 20 - க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு
வந்த நிலையில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான கஸ்தூரி நேரில் வருகை தந்து போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக நிர்வாகியும் , நடிகையுமான கஸ்தூரி பேசியதாவது ;

தங்கள் உரிமைக்காக இங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா காலத்தில் இந்த இடைக்கால சுகாதார பணியாளர்கள் தான் எத்தனையோ உயிர்களை காப்பாற்றினார்கள். திமுக ஆட்சியில் ஏற்கனவே போராட்டம் செய்து தீர்வு கிடைக்காததால் ஆட்சி மாற்றத்தை இவர்கள் தான் கொண்டு வந்துள்ளார்கள்.

முதல்வர் விஜய்க்கு இவர்கள் எதிரானவர்கள் அல்ல , அவருக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்ததே இவர்கள் தான். எங்களுக்காக எங்கள் அண்ணன் வருவார்கள் என்று கூறுகிறார்கள். முதல்வரை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார்கள்.

தாய் மாமன் தங்க மோதிரம் போடுவது சரி தான். ஆனால் அந்த தாய் மாமன் தங்க மோதிரம் போடுவதற்கு ஒரு சகோதரி வேண்டும். எல்லாருக்கும் அக்காவோ தங்கையோ கிடைத்து விட மாட்டார்கள். அனைவருக்கும் சிஸ்டர்ஸாக இவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு செய்வது தான் முதல் தாய் மாமன் சீராக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு மோதிரம் கொடுப்பது பெரிதல்ல. குழந்தை பிறப்பது தான் பெரிது அதில் இவர்களது பங்களிப்பு தான் முக்கியம்.

"ஊதிய பிரச்சனை இல்லை - வாழ்வாதார பிரச்சனை"

சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்களும் சுகாதாரத் துறை அதிகாரிகள் யாருமே இங்கு வரவில்லை. நான் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது இங்கு மூன்று பேர் மயங்கி விழுந்துள்ளார்கள். மொத்தமாக 6 -10 பேர் மயங்கி விழுந்துள்ளார்கள். யாருக்காவது பிரச்சனை என்றால் இவர்கள் தான் உதவுவார்கள். இன்று இவர்களே ஆம்புலன்ஸில் ஏறும் நிலை வந்துள்ளது. இது ஊதிய பிரச்சனை இல்லை இது ஒரு வாழ்வாதார பிரச்சனை.

2009 இல் இருந்து 17 வருடங்களாக இவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஆயுள் தண்டனை கூட முடிந்து விடும். ஆனால் இவர்களுக்கு பணி நிரந்தரம் இன்னும் செய்யப்படவில்லை. இவர்களுக்கு ஓய்வூதியமும் இல்லை. இது நீதியே இல்லை. முதல்வர் விஜய் பரந்த மனது உள்ளவர்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்வு பிரச்சனையோ உணவு பிரச்சனையோ இல்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினர் மகிழுந்து வேண்டும் மகிழுந்துக்கு ஓட்டுனர் வேண்டும் அவருக்கு சம்பளம் வேண்டும் என்று கேட்டார் அதையும் உடனடியாக செய்து கொடுத்துள்ளார். இவர்கள் இங்கு பணி நிரந்தர வேண்டும் என்று கேட்கிறார்கள் அதை அவர் நினைத்தால் ஒரு நொடியில் செய்து விடலாம் என கூறினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks