மலேசியாவில் மருத்துவ ஆராய்ச்சி படித்து வரும் மாணவர் பாரதிதாசன் தன்னை சந்தித்து நன்றி
தெரிவித்தார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் கூறினார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் இன்று என்னைச் சந்தித்தார். திராவிட மாடல் அரசும் கழகமும் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார். இவரைப் போல இன்னும் பல முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருவதைக் கேட்டுப் பெருமை கொண்டேன்.

ஆண்டிப்பட்டியில் இருந்து உலகப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குறித்து ஆர்வம் மேலிடக் கேட்டேன். பாரதிதாசன் போன்ற நம் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வழங்கி ஊக்குவித்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் இன்று என்னைச் சந்தித்தார். #DravidianModel அரசும் கழகமும் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார். இவரைப் போல இன்னும் பல முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருவதைக் கேட்டுப் பெருமை கொண்டேன். ஆண்டிப்பட்டியில் இருந்து உலகப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குறித்து ஆர்வம் மேலிடக் கேட்டேன். பாரதிதாசன் போன்ற நம் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வழங்கி ஊக்குவித்திட வேண்டும்.

— M.K.Stalin (@mkstalin) October 15, 2026

யார் இந்த பாரதிதாசன்?

மதுரையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் மலேசியாவில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் மலேசியா பல்கலைக்கழகத்தில் 'மூளை முதுமை' குறித்த ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

தமிழ்நாடு அரசின் 'அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்' கீழ் இவர் மலேசியாவில் படித்து வருகிறார். முதல் ஆண்டுக்கான உதவித்தொகை கிடைத்த நிலையில், இரண்டாம் ஆண்டுக்கான உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் அபாயம் உள்ளதாகவும், தன் ஆராய்ச்சி பாதியில் நிற்பதாகவும் குறிப்பிட்டு அவர் சமூக வலைதளங்களில் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அந்த மாணவருக்குரிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும் ஆளும் கட்சியை வலியுறுத்தின.

விடுவிக்கப்பட்ட தொகை

முதல் ஆண்டுக்கான செலவு கணக்கு விவரங்களை மாணவர் முறையாகச் சமர்ப்பிக்காததால்தான் தாமதம் ஏற்பட்டதாகவும், எனினும் மாணவரின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான தொகை அரசு தரப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.

Source: Read Full Article