ஆவினை புதைகுழியில் தள்ளக் கூடாது! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

ஆவினை புதைகுழியில் தள்ளக் கூடாது! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
News Image

சென்னை: பனீர், வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பால் பொருள்களின் உற்பத்தியை ஆவின் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாகவும், ஆவின் நிறுவனத்தை மீட்டெடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருந்த வெண்ணெய், பனீர், பால் பவுடர் உள்ளிட்ட 100&க்கும் மேற்பட்ட பால் பொருள்களின் உற்பத்தியை ஆவின் நிறுவனம் நிறுத்தி விட்டதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அமுல் நிறுவனத்துடன் போட்டியிடும் அளவுக்கு வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஆவின் நிறுவனம் இந்த அளவுக்கு சீரழிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால், சந்தையின் தேவையை நிறைவேற்ற முடியாமல் ஆவின் நிறுவனம் தான் தடுமாறி வருகிறது. மக்களுக்கான பால் தேவையில் 15 முதல் 16% வரை மட்டுமே வழங்கி வரும் ஆவின் நிறுவனம், இப்போது பிற பால் பொருள்களின் உற்பத்தியையும் முழுமையாக நிறுத்தியுள்ளது. ஆவின் நிறுவனத்தின் சார்பில் 230&க்கும் மேற்பட்ட பால் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக பனீர், வெண்ணெய், பல வகை மில்க்ஷேக், பால் பவுடர், பாதாம், பிஸ்தா, வால்நட் மிக்ஸ் பவுடர், குக்கீஸ், சாக்லேட் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆவின் நெய் உற்பத்தி மற்றும் விற்பனையும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பொருள்களை வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.

பனீர், வெண்ணெய், நெய், பல வகையான குளிர் பானங்களுக்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில், அதை நிறைவேற்றுவதில் ஆவின் நிறுவனத்திற்கு என்ன சிக்கல்? எனத் தெரியவில்லை. 2021-ஆம் ஆண்டில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தினமும் 41 லட்சம் லிட்டர் என்ற உச்சத்தை அடைந்திருந்தது. ஆனால், அதன்பின் படிப்படியாக குறைந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் 28 லட்சம் லிட்டர் என்ற நிலையை அடைந்தது. ஆனாலும், ஆவின் பாலுக்கான கொள்முதல் விலை ரூ.38&லிருந்து  ரூ.6 உயர்த்தப்பட்டு, ரூ.44 என்ற உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு தினமும் 32 லட்சம் லிட்டர் என்ற அளவை அண்மையில் எட்டியிருக்கிறது.

இந்த அளவு பாலைக் கொண்டு அனைத்து வகையான பால் பொருள்களையும் தடையின்றி தயாரித்து வழங்க முடியும். ஆனால், பால் கொள்முதல் அதிகரித்த பிறகும் 100&க்கும் மேற்பட்ட பால் பொருள்களின் உற்பத்தியை ஆவின் நிறுவனம் நிறுத்தியதற்கு காரணம் அது எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடியும், நிர்வாக குளறுபடிகளும் தான் என்று கூறப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆவின் நிறுவனம்  பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. அதை ஈடு செய்வதற்கு தேவையான நிதியை மாநில அரசு வழங்க  மறுப்பதால் ஆவின் நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகள் முடங்கும் நிலை உருவாகியிருப்பதாகவும், அதன் தொடக்கம் தான் பனீர், வெண்ணெய் உள்ளிட்ட 100&க்கும் மேற்பட்ட பால் பொருள்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பது என்றும் ஆவின் உயரதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

ஆவின் நிறுவனம் அந்தப் பெயரில் 1981&ஆம் ஆண்டில் தான் தொடங்கப்பட்டது என்று கூறப்பட்டாலும், அதற்கு முன் 1958&ஆம் ஆண்டிலிருந்தே மெட்ராஸ் டெய்ரி என்ற பெயரில் பால்வளத்துறையின் அங்கமாக செயல்பட்டு வந்திருக்கிறது.  இந்தியாவின் மிகப்பெரிய பால் கூட்டுறவு இணையமான அமுல், 1946&ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்து தொடங்கப்பட்ட பால் கூட்டுறவு இணையம் ஆவின் நிறுவனம் தான். ஆவின் நிறுவனத்தைப் பின்பற்றி தான் 1984&ஆம் ஆண்டில் கர்நாடக அரசின் நந்தினி  உருவாக்கப்பட்டது. கடந்த 68 ஆண்டுகளில் அமுல் நிறுவனத்துடன் போட்டியிட்டு வளர்ந்திருக்க வேண்டிய ஆவின் நிறுவனம், கர்நாடகத்தின் நந்தினி நிறுவனத்துடன் கூட போட்டியிட முடியாமல் முடங்கிக் கிடக்கிறது.

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 11&ஆம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 1.15 கோடி டன், அதாவது 1,120 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. தினமும் 3.06 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில்,  மூன்றில் ஒரு பங்கு, அதாவது  குறைந்தது ஒரு கோடி லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கையாண்டால் மட்டும் தான், தமிழ்நாட்டில் பால் மற்றும் பால் பொருள்களின் விலையை ஆவின் நிறுவனத்தால் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அது நடக்கவில்லை. தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் 32 லட்சம் லிட்டர் பால் என்பது தமிழகத்தின் மொத்த உற்பத்தியில் சுமார் 10% மட்டும் தான். இதை மும்மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாதது தான் ஆவின் வீழ்ச்சிக்கு காரணம் ஆகும்.

அமுல் நிறுவனம் தினமும் 3.10 கோடி லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. அதற்கு அடுத்தபடியாக  கர்நாடக அரசின் நந்தினி நிறுவனம் தினமும் 1.05 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. இந்த நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் நிறுவனத்தின் கொள்முதல் மற்றும் விற்பனையை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அப்போது தான் ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சியையும், இலாபத்தையும்  உறுதி செய்ய முடியும். மாறாக, ஆவின் நிறுவனம் உற்பத்தி செய்யும் பால் பொருள்களின் எண்ணிக்கையை குறைப்பதால் எந்த பயனும் ஏற்படாது. அது ஆவின் நிறுவனத்தை புதைகுழியில் தள்ளுவதற்கே வழி வகுக்கும்.

எனவே, ஆவின் நிறுவனத்தின் இப்போதைய செயல்பாடுகள் குறித்து ஆராயவும், அதன் வளர்ச்சி மற்றும் இலாபத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் வல்லுனர் குழு அமைத்து அதன் அறிக்கையை பெற்று செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை  ஆவின் நிறுவனத்தின் பால் வகைகள், பனீர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருள்களும் முழு அளவில் தயாரிக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படுவதை ஆவின் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks