நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?

நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
News Image

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும், ராயபுரம் தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமுவும் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வடகிழக்கு பருவமழை தொடர்பான கூட்டம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அதனை எதிர்கொள்ளும் பொருட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கைப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி கட்டட வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னையின் 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள், சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். அந்த வகையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துறைமுகம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான சேகர்பாபு ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

போர் அடிக்கிறது .. சீக்கிரம் முடிங்க

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு பேசும்போது, மழை வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது அவருக்கு பின்னால் மேடையில் அமர்ந்திருந்த ராயபுரம் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ விஜய் தாமு, ‘போர் அடிக்கிறது சீக்கிரம் பேசி முடிங்க’ என சொல்லியதாக கூறப்படுகிறது.

இதனைக் கேட்டு கோபமடைந்த சேகர்பாபு,  “உனக்கு போர் அடிக்கிறது என்றால், நாங்க என்ன செய்ய முடியும்?.. நான் அனாவசியமாகவா பேசிக் கொண்டிருக்கிறேன்? என சட்டென கேட்க அங்கு பரபரப்பு நிலவியது. அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் விஜய் பாலாஜி சேகர்பாபுவை சமாதானம் செய்தார்.

தொடர்ந்து பேசிய சேகர்பாபு, “நாங்கள் இந்த கூட்டத்தில் எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை. ஜனநாயக முறையில் மதித்து எங்களை இந்த கூட்டத்திற்கு அழைத்த நிலையில் நாங்களும் ஜனநாயக அடிப்படையில் நடந்து கொண்டோம். நான் சென்னையை சேர்ந்தவன் தான், ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்துள்ளேன். உள்ளாட்சி தேர்தல்களில் நின்றவன். சிறுவயதிலிருந்தே துறைமுகம் தொகுதியில் தான் இருக்கிறேன். இவை எல்லாம் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு நன்றாக தெரியும் இந்த பணிகளை எல்லாம் செய்தால் வெள்ளத்தை சமாளிக்கலாம் என்று தான் சொல்கிறோம். தற்போது வருகின்ற பருவமழை மழை எல்.நினோ எனப்படும் இயல்பை விட அதிகமாக வெப்பமடையும் நிகழ்வால் இருப்பது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது” என்று கூறினார்.

விஜய் தாமு உண்மையில் அப்படி சொன்னாரா?

இந்நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த விஜய் தாமுவிடம் ஊடகத்தினர், சேகர்பாபு பேசும்போது அப்படி சொன்னீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “நான் அப்படியெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. சேகர்பாபு ரொம்ப நேரமாக பேசிக் கொண்டிருந்தார். இன்னும் கொஞ்சம் டைம் வேண்டும் என கேட்டார். அவ்வளவுதான் நடந்தது” என விளக்கமளித்தார். எனினும் சேகர்பாபு - விஜய் தாமு இடையேயான மோதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks